செங்கோட்டையில் வன்முறை சம்பவம்: நடிகர் தீப் சித்து கைது.!

செங்கோட்டையில் வன்முறை சம்பவம்: நடிகர் தீப் சித்து கைது.!;

Update: 2021-02-09 12:41 GMT

டெல்லியில் கடந்த ஜனவரி 26ம் தேதி விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் மிகப்பெரிய வன்முறை வெடித்தது. அப்போது உச்சகட்டமாக செங்கோட்டையில் உள்ள இந்திய தேசியக்கொடியை இறக்கிவிட்டு காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் கொடிகளை ஏற்றினர்.

இதன் பின்னர் டெல்லி போலீசார் கலவரக்காரர்களை விரட்டியடித்து மீண்டும் தேசியக்கொடியை ஏற்றினார்கள். இதற்கு காரணமாக இருந்தவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், செங்கோட்டை சம்பவத்தற்கு முழுக்காரணமாக செயல்பட்ட பஞ்சாப் நடிகர் தீப் சித்துவை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். தீப் சிங் உள்ளிட்ட 4 பேர் குறித்து துப்பு கொடுத்தால் தலா ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று டெல்லி போலீசார் அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News