வன்முறை சம்பவம்! 12 விவசாயத் தலைவர்கள் நேரில் ஆஜராக டெல்லி போலீஸ் உத்தரவு!

வன்முறை சம்பவம்! 12 விவசாயத் தலைவர்கள் நேரில் ஆஜராக டெல்லி போலீஸ் உத்தரவு!

Update: 2021-01-29 17:27 GMT

டெல்லியில் கடந்த 26ம் தேதி விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி மிகப்பெரிய வன்முறை சம்பவமாக மாறியது. இந்த போராட்டத்தை முன்னின்று நடத்திய விவசாய பிரிவு தலைவர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பியுள்ளது.

டெல்லியில் கடந்த 2 மாதங்களாக விவசாயிகள் வேளாண் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வந்தனர். இதனிடையே குடியரசு தினவிழா கடந்த 26ம் தேதி நடைபெற்றது. அதில் டிராக்டர் பேரணி நடத்துகிறோம் என டெல்லி போலீசாரிடம் விவசாயிகள் அனுமதி வாங்கினர்.

போலீசார் அனுமதி அளித்த இடத்தை விட்டு போராட்டக்குழு வேறு இடத்தை நோக்கி டிராக்டர் பேரணியை நடத்தினர். இதனால் பேரணி வன்முறை களமாக மாறியது. போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தனர்.

இதில் 300க்கும் மேற்பட்ட போலீசார் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பேரணியை நடத்திய 12 விவசாய சங்க தலைவர்களுக்கு டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவர்கள் இன்று ஆஜராக வேண்டும் எனவும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து டெல்லியில் பதுங்கியிருந்த விவசாய பிரிவு தலைவர்கள் ஒவ்வொருவராக தலைமறைவாகி வருகின்றனர். ஆனால் பிற மாநிலங்களுக்கு விவசாய தலைவர்கள் சென்றாலும் அவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படுவார்கள் என டெல்லி போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News