பிரபல தொடரின் முன்னணி நடிகர்கள் வோகல் ஃபார் லோக்கல் இயக்கத்தின் விளம்பரத்திற்காக நடித்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு பலகாரங்களின் விற்பனையானது சற்று அதிகமாக இருக்கும். இந்த நிலையில் உள்ளூர் பொருட்களையே வாங்க மக்களை ஊக்குவிக்கும் வகையில் ஸ்டார் பிளஸ் சேனல் ஒளிபரப்பாகும் அனுபமா என்ற பிரபல தொடரின் நட்சத்திரங்கள் ரூபாலி கங்குலி மற்றும் கௌரவ் கண்ணா ஆகியோர் ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளனர். இந்த விளம்பரமானது பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட வோகல் ஃபார் லோக்கல் என்ற இயக்கத்திற்கு உத்வேகம் அளிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. பிரபல தொடரின் நட்சத்திரங்கள் வோக்கல் ஃபார் லோக்கல் இயக்கத்திற்காக விளம்பரத்தில் தோன்றி உள்ளூர் மக்களுக்கான குரல் கொடுத்துள்ளது பிரதமர் நரேந்திர மோடியை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மேலும் பிரதமர் நரேந்திர மோடி இந்த விளம்பரத்தை தனது எக்ஸ் வளையதளத்தில் பகிர்ந்தது மட்டுமின்றி உள்ளூருக்கான குரல் இயக்கம் நாடு முழுவதும் பெரும் வேகத்தைப் பெற்று வருகிறது என பதிவிட்டு தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
Source : Asianet news