வாய்ஸ் மெசேஜ்.. இந்தியாவில் முதற்கட்ட சோதனையை செய்த ட்விட்டர் நிறுவனம்.!
வாய்ஸ் மெசேஜ்.. இந்தியாவில் முதற்கட்ட சோதனையை செய்த ட்விட்டர் நிறுவனம்.!
உலகளவில் பெரும் தலைவர்கள் மற்றும் சாதாரண மக்கள் என அனைவரும் உபயோகிக்கின்ற ஒரு தளம் என்றால் அது ட்விட்டர்தான். தங்களது கருத்துக்களை ட்விட்டரில் பதிவு செய்தால் ஒரு செகன்ட்டில் பல லட்சம் பேர் பார்வையிடுகின்றனர். இதன் காரணமாகவே உலகத்தலைவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாலும் டவிட்டர் மூலமாக தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இதனால் உடனடியாக பல கோடி மக்கள் தெரிந்து கொள்ளவும் இந்த தளம் உதவுகிறது.
இந்நிலையில், சமூக வலைத்தளமான ட்விட்டரில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் சோதனையை இந்தியாவில் தொடங்கியுள்ளது. அது பற்றிய ட்வீட்டை ட்விட்டர் இந்தியா போஸ்ட் செய்துள்ளது. இந்தியா போன்று பிரேசில், ஜப்பான் மாதிரியான நாடுகளிலும் இந்த வாய்ஸ் மெசேஜ் வசதி சோதனையிட்டு வருவதாக ட்விட்டர் தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த வசதி எப்படி இருக்கிறது என்பது தெரிந்து கொள்ள ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளது ட்விட்டர் நிறுவனம். வாய்ஸ் மெசேஜ் வந்தால் அனைவரும் டவிட்டர் மூலமாக பிறந்த நாள் வாழ்த்து மற்றும் இறப்பு செய்திகளை உடனடியாக பதிவிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.