கொரோனா தடுப்பூசி போடுவதாக அழைப்பு வந்தால் எச்சரிக்கை! வங்கி கணக்கிலிருந்து பணம் பறிபோகும் அபாயம்!

கொரோனா தடுப்பூசி போடுவதாக அழைப்பு வந்தால் எச்சரிக்கை! வங்கி கணக்கிலிருந்து பணம் பறிபோகும் அபாயம்!

Update: 2020-12-25 06:58 GMT

கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு பெயர் பதிவு செய்ய சொல்லி வரும் மொபைல் போன் அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகளுக்கு மக்கள் பலியாக வேண்டாம் என்று மத்திய பிரதேச போலீசார் வியாழக்கிழமை எச்சரித்தனர்.

"மக்கள் எந்த தொலைபேசி அழைப்பிலும் கலந்து கொள்ளக்கூடாது. கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கும் இணைப்பை கிளிக் செய்யக்கூடாது" என்று சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரஜத் சக்லேச்சா கூறினார்.

ரகசிய தகவல்களைப் பெறுவதற்கும், வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை பறிப்பதற்கும் சைபர் மோசடி செய்பவர்களின் முயற்சி இது என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

அத்தகைய ஒரு அழைப்பைப் பெற்ற ஒரு மாணவர் சைபர் பிரிவுக்கு தகவல் கொடுத்தார், அதன் பிறகு இந்த மோசடி குறித்து ஆலோசனை எச்சரிக்கை விடுக்கப்பட்டது, சக்லெச்சா கூறினார்.

மோசடி செய்பவர்கள், தடுப்பூசிக்கான முன் பதிவு என்ற போலிக்காரணத்தில் ஆதார் எண் போன்ற தகவல்களைத் தேடுகிறார்கள், பின்னர் ஒரு OTP யைக் கேட்கிறார்கள், இதன் மூலம் அவர்கள் அந்த நபரின் இணையத்துடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுக்கிறார்கள், என்றார்.

கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக குறிப்பிட்ட சில செல்போன் எண்களில் இருந்து, பொதுமக்களுக்கு அழைப்பு வருகிறது. எதிர்முனையில் பேசும் நபர், தன்னை மத்திய அரசு அதிகாரி என்று அறிமுகம் செய்து கொள்கிறார்.

பிறகு மோசடியாக வங்கி கணக்கு விவரங்களை கேட்டு மர்ம நபர்கள் பணத்தை முறைகேடாக எடுத்து விடுகின்றனர். மக்கள் பணத்தை பறி கொடுத்த பின்னரே விழிப்படைந்து புகார் கொடுக்கின்றனர்.

 நிவாரணத்தொகைக்கு உங்களை தேர்வு செய்துள்ளோம். அடுத்த சில மணி நேரத்தில் வங்கி கணக்கில் தொகை செலுத்தப்படும் என்று கூறுகிறார். அதை உண்மை என நம்பி ஆர்வமாக பேசும் மக்களிடம், மர்ம நபர்கள் நைசாக பேசி வங்கி கணக்கு எண், ஏ.டி.எம். கார்டு எண், 3 இலக்க சி.வி.வி. எண் ஆகியவற்றை வாங்கி விடுகின்றனர்.

Similar News