ஜல் ஜீவன் திட்டத்தில் 9 கோடி கிராமங்களில் குடிநீர் குழாய் இணைப்பு: மத்திய அரசு தகவல்!
ஜல் ஜீவன் திட்டத்தின் மூலமாக 9 கோடி கிராமங்களில் ஒவ்வொரு வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவலை கூறியுள்ளது.
ஜல் ஜீவன் திட்டத்தின் மூலமாக 9 கோடி கிராமங்களில் ஒவ்வொரு வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவலை கூறியுள்ளது.
இது பற்றி ஜல் ஜீவன் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; 2024ம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள அனைத்து வீடுகளிலும் சுத்தமான குடிநீர் குழாய் மூலம் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவுப்படி கொரோனா வைரஸ் தொற்று இடையூறுகள் இருந்தாலும் இரண்டரை ஆண்டுகளில் ஜல் ஜீவன் திட்டத்தின் வாயிலாக 5.77 கோடிக்கும் அதிகமான கிராமப்புற குடும்பங்களுக்கு குழாய் மூலமாக குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.
இதுவரைக்கும் நாடு முழுவதும் 9 கோடி கிராமங்களில் உள்ள குடும்பங்கள் குழாய் மூலமாக சுத்தமான குடிநீரை பெற்று பலன் அடைந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: Daily Thanthi