140 கோடி தடுப்பூசிகள் செலுத்தி சாதனை படைத்துள்ளோம்: 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தகவல்!

கொரோனா பெருந்தொற்றை தடுப்பதற்காக நமது நாட்டில் இதுவரை 140 கோடி தடுப்பூசிகள் போட்டு சாதனை படைத்துள்ளோம் என்று பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சி மூலமாக தெரிவித்துள்ளார்.

Update: 2021-12-26 08:58 GMT

கொரோனா பெருந்தொற்றை தடுப்பதற்காக நமது நாட்டில் இதுவரை 140 கோடி தடுப்பூசிகள் போட்டு சாதனை படைத்துள்ளோம் என்று பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சி மூலமாக தெரிவித்துள்ளார்.

பிரதமராக மோடி பதவியேற்றதில் இருந்து நாட்டு மக்களிடம் வானொலியில் ஒளிபரப்பாகும் மன் கி பாத் நிகழ்ச்சி வாயிலாக உரையாற்றி வருகின்றார். அந்த வகையில் இன்று மாத கடைசி ஞாயிறு என்பதால் இன்று அவர் பல்வேறு விவகாரங்கள் பற்றி உரையாற்றினார். அதன்படி இன்று (டிசம்பர் 26) அவர் பேசியதாவது: கொரோனா பெருந்தொற்றின் உருமாற்றத்தை நாம் மறந்துவிடக்கூடாது. நமது கூட்டு முயற்சி இருந்தால் மட்டுமே கொரோனாவை வீழ்த்த முடியும். 


நமது இந்திய நாட்டில் 140 கோடி தடுப்பூசிகள் போட்டு சாதனை படைத்துள்ளோம். ஒவ்வொரு குடிமகனுக்குமான சாதனை ஆகும். தற்போது கொரோனாவில் இருந்து உருவான புதிய வைரஸான ஒமைக்ரான் நமது கதவை தட்ட தொடங்கியுள்ளது. இதனை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அது மட்டுமின்றி குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த குரூப் கேப்டன் வருண் சிங் ஒட்டுமொத்த நாட்டிற்கு உந்து சக்தியாக விளங்கியுள்ளார். வெற்றியின் உச்சத்தை தொட்டபோதிலும் அவர் தனது அடித்தளத்தை மறக்கவில்லை. எந்த செயலில் ஈடுபட்டாலும் அதில் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும். நம்பிக்கை மட்டும் எப்போதும் இழக்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Source: Daily Thanthi

Image Courtesy:Hindustan Times

Tags:    

Similar News