வங்கிகளில் இருந்து சட்டவிரோதமாக வாங்கிச்சென்ற பணத்தை திரும்ப பெறுவோம்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சவால்!

இந்தியாவில் வங்கிகளில் இருந்து சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்ட பணத்தை திரும்ப பெறுவோம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சவால் விடுத்துள்ளார்.

Update: 2021-11-24 03:29 GMT

இந்தியாவில் வங்கிகளில் இருந்து சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்ட பணத்தை திரும்ப பெறுவோம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சவால் விடுத்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டு நாள் பயணமாக கடந்த 22ம் தேதி காஷ்மீர் பயணம் மேற்கொண்டார். அப்போது ஸ்ரீநகரில் அரசு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு ஜம்முக்கு புறப்பட்டு சென்றார்.


அப்போது அங்கு அரசு சார்பில பலவேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது கடன் பெறுவர்களுக்கான ஒப்புதலுக்கான ஆணைகளை வழங்கினார். இந்த பின்னர் அங்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும்போது: கடந்த 2014ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்த பின்னர் இந்தியாவில் வாராக்கடன் மிகப்பெரிய கவலையாக அமைந்தது. அதனை மீட்பதற்காக பிரதமர் மோடி பல்வேறு சீர்த்திருத்தங்களை கொண்டு வந்தார். அதன்படி வங்கியில் கடன் வாங்கிவிட்டு அதனை திருப்பிச் செலுத்தாமல் இருப்பவர்களை விடாமல் துரத்தினோம். அவர்கள் நமது நாட்டில் இருந்தாலும் சரி வெளிநாடுகளில் இருந்தாலும் சரி அவர்களை விடவில்லை.

தப்பியோடிவர்களின் வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்கள் முடக்கப்பட்டது. அவை சட்டரீதியாக விற்கப்பட்டோ அல்லது ஏலம் விடப்பட்டோ கிடைத்த பணத்தை மீண்டும் வங்கியிலே ஒப்படைத்தோம். இது போன்ற பணிகள் தொடர்ந்து நடைபெறும். அதே போன்று சட்டவிரோதமாக வங்கியில் எடுத்து சென்றவர்களின் பணம் மீண்டும் மீட்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தின்போது வங்கியின் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Source: Daily Thanthi

Image Courtesy: Twiter


Tags:    

Similar News