மேற்கு வங்காளத்தில் தொடரும் அட்டூழியம்.. பா.ஜ.க., தலைவர்களின் காவலர்கள் மீது TMC தொண்டர்கள் தாக்குதல்.!

மேற்கு வங்காளத்தில் தொடரும் அட்டூழியம்.. பா.ஜ.க., தலைவர்களின் காவலர்கள் மீது TMC தொண்டர்கள் தாக்குதல்.!

Update: 2021-01-05 12:56 GMT

திங்கட்கிழமை மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில்  வாட்கஞ்ச் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க தேசிய செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா, தேசிய துணைத் தலைவர் முகுல் ராய் மற்றும் அர்ஜுனும் சிங் ஆகியோரின் பாதுகாவலர்கள் தாக்கப்பட்டுள்ளனர். 

கொல்கத்தாவில் பா.ஜ.க தலைமையகத்திலிருந்து நடத்தப் பெற்ற நிகழ்ச்சியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த ஊர்வலம் வாட்கஞ் பகுதியைக் கடக்கும் போது, பா.ஜ.க தலைவர்களின் காவலர்கள் மீது TMC ஊழியர்கள் கற்கள், செருப்பு முதலியவற்றால் தாக்குதல் நடத்தியுள்ளனர். காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானம் செய்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்தனர். பா.ஜ.க தலைவர்கள் புதிதாக இணைந்த ஷோவன் சாட்டர்ஜியின் இல்லத்தில் சென்று சந்தித்தனர். 

Full View

இந்த ஊர்வலமானது ஹாஸ்டிங் பகுதியில் வரை அமைதியாக நடத்தப்பட்டது என்று தாக்குதலில் சிறிதாகக் காயமடைந்த கைலாஷ் விஜயவர்ஜியா தெரிவித்தார். "இருப்பினும் TMC தொண்டர்கள் செருப்புகள் மற்றும் கற்களை எங்கள் மீது எறிந்தனர். அவர்களின் ஆத்திரமூட்டும் செயல்களுக்கு எங்கள் தொண்டர்கள் பதிலளிக்க விரும்பாததால் அமைதியாக இருந்தனர். வன்முறைக்கு நாங்கள் வன்முறையால் பதில் கூற மாட்டோம். வாக்குகள் மூலம் பதிலளிப்போம்," என்றும் அவர் கூறினார். 

இதே போன்று கடந்த மாதமும் பா.ஜ.க தலைவர்கள் JP நட்டா மற்றும் கைலாஷ் விஜயவர்ஜியா அவரது காவலர்களும் மற்றும் வாகனமும் TMC தொண்டர்களால் தாக்கப்பட்டது. அதே நேரத்தில் காவல்துறை அங்கு மௌனத்தைக் கடைப்பிடித்தது.

அவரது வாகனம் சேதமடைந்த வீடியோவையும் அவர் பகிர்ந்தார். மேலும் இந்த தாக்குதலது மம்தா அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் நடந்துள்ளது இதற்கு காவல்துறையும் துணையாக செயல்படுகின்றனர்  என்றும் கூறினார்.

மேலும் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து அவர்களின் உயிர்கள் புல்லட் புரூஃப் வாகனங்கள் இருந்ததால் தப்பியதும் என்றும் கூறினார். 

Similar News