மேற்கு வங்காளம் : பரபரப்பு! சரஸ்வதி சிலை மீது தாக்குதல்.. பக்தர்கள் வீதியில் போராட்டம்.!
மேற்கு வங்காளம் : பரபரப்பு! சரஸ்வதி சிலை மீது தாக்குதல்.. பக்தர்கள் வீதியில் போராட்டம்.!
நாட்டில் தற்போது இந்துக்கள் மீதும் இந்து சிலைகள் மீதும் தாக்குதல் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. மேற்கு வங்காளத்தில் ஒரு பரபரப்பு சம்பவமாகப் புதன்கிழமை அன்று சரஸ்வதி சிலையைத் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலானது முஸ்லீம் இளைஞர் ஜலால் தலைமையில் நடந்துள்ளது. இந்த சம்பவமானது சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டு ஒரு நாளைக்குப் பின்னர் சிலையைக் கரைப்பதற்கு முன்பு நடந்துள்ளது.
இந்த சம்பவத்துக்குப் பின்னர் இந்து மக்கள் சாலையில் திரண்டு போராட்டத்தில் இறங்கினர். மேலும் அவர்கள் கொடிகளை ஏந்தி ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிடத் தொடங்கினர். அவர்கள் குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
Full View
அவர்கள் ஊடகத்திடம் ஜலால் தலைமையிலான முஸ்லீம் இளைஞர்கள் சிலர் போதையில், வீதியில் பந்தலில் வைக்கப்பட்டிருந்த சரஸ்வதி சிலையின் மேல் தங்கள் முற்றடுத்தனத்தை காட்டி அதனைச் சேதம் செய்தனர் என்று தெரிவித்துள்ளனர். மேலும் காவல்துறையினர் ஜலாலை பிடித்தனர். ஆனால் அவன் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுபோன்று தாக்குதல் சம்பவம் இது முதன்முறை அல்ல. இதுபோன்ற சிலைகள் மற்றும் கோவில்கள் மீதான தாக்குதல்கள் பல பதிவாகியுள்ளன.