மேற்கு வங்காளம்: பா.ஜ.க தலைவர்களின் வாகனங்கள் மற்றும் காவலர்கள் மீது கல் வீச்சு.!

மேற்கு வங்காளம்: பா.ஜ.க தலைவர்களின் வாகனங்கள் மற்றும் காவலர்கள் மீது கல் வீச்சு.!

Update: 2020-12-10 14:28 GMT

வியாழக்கிழமை, 2021 மேற்கு வங்காள தேர்தலை ஒட்டி பா.ஜ.க கட்சி உறுப்பினர்களைச் சந்திக்கச் சென்ற பா.ஜ.க தலைவர்கள் JP நட்டா மற்றும் கைலாஷ் விஜயவர்கியாவின் வாகனங்கள் மற்றும் காவலர்களை  டைமண்ட் ஹார்பருக்குச் சென்று கொண்டிருக்கும் வழியில் தாக்கப்பட்டுள்ளன.

JP நட்டா காவலர்கள் மீது மேற்கு வங்காளத்தில் டைமண்ட் ஹார்பருக்குச் செல்லும் வழியில் கற்களால் தாக்குதல் நடத்தப்பட்டதாக, பா.ஜ.க தலைவர் திலீப் கோஷ் குற்றம்சாட்டியுள்ளார். மேலும்  கைலாஷ் விஜயவர்கியாவின் காவலர்களும் தாக்கப்பட்டுள்ளனர். விஜயவர்கியா,  வாகனம் தாக்கப்பட்டு கார் கண்ணாடி உடைந்த புகைப்படத்தையும் வீடியோவாக வெளியிட்டுள்ளார். 

இரு தலைவர்களும் டைமண்ட் ஹார்பருக்குச் செல்லும் வழியில், போராட்டக்காரர்கள் ஒன்று திரண்டு சாலைகளை மறித்து நட்டா காவலர்களைச் செல்ல விடாமல் தடுத்தனர். போராட்டக்காரர்கள் வாகனங்கள் மீதும் கற்களை வீசி தாக்கினர். நட்டா பா.ஜ.க உறுப்பினர்களைச் சந்திக்கச் சென்றார். தாக்குதலைத் தொடர்ந்து, காவல்துறையினர் வாகனங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். 

"நாங்கள் டைமண்ட் ஹார்பருக்குச் செல்லும் வழியில் TMC ஆதரவாளர்கள் வாகனங்களை மறித்துத் தாக்குதல் நடத்தினர். இது TMC யின் உண்மை சுயரூபத்தைக் காண்பிக்கிறது," என்று திலீப் கோஷ் கூறினார். 

Similar News