மேற்கு வங்கம்: மத்திய அமைச்சர் கார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய மம்தா கட்சியினர்.!

மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது.

Update: 2021-05-06 09:45 GMT

மேற்கு வங்க மாநிலத்தில் மத்திய அமைச்சர் முரளிதரன் சென்ற கார் மீது கற்கள் வீசியும், கட்டைகளை கொண்டு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி பெற்ற பின்னர் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீது தினந்தோறும் தாக்குதல் சம்பவம் நடைபெற்று வருகிறது.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து பாஜகவினரை தாக்கி வருகின்றனர். அது மட்டுமின்றி சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து வருவது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம், மேற்கு மிட்னாப்பூர் பகுதியில் மத்திய அமைச்சர் முரளிதரன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திரிணாமூல் காங்கிரஸ் குண்டர்கள், கார் மீது கற்களாலும், கட்டைகளாலும் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் அமைச்சருக்கு காயமின்றி தப்பினார். ஓட்டுநர் உட்பட பலர் இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளனர். இதே போன்ற நிலைதான் அம்மாநிலம் முழுவதும் அரங்கேறி வருகிறது. எங்கு பார்த்தாலும் பற்றி எரியும் சம்பவம் நிகழ்ந்து வருகிறது. மேற்கு வங்க வன்முறை சம்பவத்துக்கு நாடு முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.

Similar News