பெண்களும், குழந்தைகளும் ஜனநாயக நாட்டில் உயிருடன் எரிக்கப்படுவது வேதனை அளிக்கிறது: மேற்கு வங்க ஆளுநர்!

Update: 2022-03-24 01:58 GMT

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாது ஷேய்க் என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதனால் இவரது கொலைக்கு காரணமாக பீர்பூம் மாவட்டம், ராம்பூர்ஹாட்டில் போக்டுய் என்ற கிராமத்தில் வன்முறை ஆட்டத்தை இஸ்லாமியர்கள் ஏற்படுத்தினர். இதில் பல வீடுகளுக்கு வைக்கப்பட்ட தீயில் 8 பேர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர்.

இந்த வன்முறை சம்பவத்தில் மேற்கு வங்காள மாநிலம் முழுவதும் மிகப்பெரிய பதற்றமான சூழல் ஏற்படுத்தியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து பாஜக போராட்டம் நடத்தி வருகிறது.

இந்நிலையில், மேற்கு வங்காள ஆளுநர் ஜக்தீப் கன்கர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ''பெண்களும் குழந்தைகளும் உயிருடன் எரிக்கப்படுவதை விட ஜனநாயக நாட்டில் வேதனை அளிக்கக்கூடிய வேறு எதுவும் இருக்க முடியாது. இந்த விவகாரத்தில் இனிமேல் நான் எதுவும் பேச மாட்டேன். பிரதமர் மோடி பேசியதை நீங்கள் அனைவரும் கேட்டிருப்பீர்கள். இது போன்ற படுகொலைகளை நாம் யாரும் பார்த்ததில்லை'' என்றார்.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News