மேற்குவங்கம்: 8 பேர் எரித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம்!
மேற்கு வங்கத்தில் பிர்பும் மாவட்டத்தில் 8 பேர் உயிருடன் தீ வைத்து கொல்லப்பட்ட சம்பவம் பற்றி சிபிஐ விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய கொல்கத்தா உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேற்குவங்க மாநிலம், பிர்பும் மாவட்டம் அருகே ராம்புராட் என்ற ஊரில் திரிணாமுல் காங்கிரிஸ் கட்சியை சேர்ந்த பாதுஷேக் என்பவர் கடந்த திங்கட்கிழமை இரவு மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு எதிர்வினையாக போக்டுய் என்ற கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதில் 2 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிழிந்தனர். இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சியடைய செய்தது.
இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி மற்றும் மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தன்கர் கண்டனங்களை தெரிவித்தனர். இதற்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. இதனை கொல்கத்தா உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசராணை நடத்தியது. அதன்படி வழக்கு விசாரணையை மாநில போலீசாரிடம் இருந்து சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Source, Image Courtesy: Puthiyathalaimurai