மேற்கு வங்காளம்: அதிர்ச்சி.! அமைச்சர் ஜாகிர் ஹுசைன் மீது குண்டெறி தாக்குதல்- வைரலாகும் வீடியோ.!

மேற்கு வங்காளம்: அதிர்ச்சி.! அமைச்சர் ஜாகிர் ஹுசைன் மீது குண்டெறி தாக்குதல்- வைரலாகும் வீடியோ.!

Update: 2021-02-18 11:08 GMT

மேற்கு வங்காளத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவமாக, தொழிலாளர் அமைச்சர் ஜாகிர் ஹூசைன் மீது ஜாங்கிப்பூர் ரயில் நிலையத்தில் வைத்து நேற்று குண்டு வீசியுள்ளனர். இந்த சம்பவமானது முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நடந்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஹுசைன் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 



மேலும் இவருடன் உடன் வந்த நபர்களும் காயமடைந்துள்ளனர். இவர் கொல்கத்தா மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வதுக்கு முன்பு முதற்கட்ட சிகிச்சையைப் பெற்றார். மேலும் இவர் மீதான குண்டெறி தாக்குதல் கேமராவில் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் ஹுசைன் பிற நபர்களுடன் நடந்துவந்த சில நொடிகளிலேயே குண்டு வெடித்துத் தாக்குதல் நடந்துள்ளது. 
 

 


இந்த சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்த மத்திய ரயில்வே துறை அமைச்சர், "மேற்கு வங்காளத்தில் நிம்திட்டா ரயில் நிலையத்தில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து கண்டனங்களைத் தெரிவிக்கிறேன். மேலும் காயமடைந்தவர்கள் விரைவாகக் குணமடைய பிராத்திக்கிறேன்," என்று தெரிவித்துள்ளார்.



ஹுசைன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது நிலைமை தற்போது சீராக உள்ளது மற்றும் ஒரு கை மற்றும் காலில் காயங்களைப் பெற்றுள்ளார் என்று முர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரியில் கண்காணிப்பாளர் Dr அமியா குமார் பேரா தெரிவித்தார். 


இந்த தாக்குதலுக்குக் கண்டனங்களை பா.ஜ.க தேசிய செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா தெரிவித்துள்ளார். மேலும் குண்டு வெடிப்பு தாக்குதலுக்குக் கண்டனங்களைத் தெரிவித்து மாநிலத்தில் சட்ட ஒழுங்கு குறைந்து வருவதாக மாநில பா.ஜ.க தலைவர் திலிப் கோஷ் தெரிவித்தார். "இந்த சம்பவம் மேற்கு வங்காளத்தில் அமைச்சர்களுக்குக் கூட பாதுகாப்பு இல்லை என்பதை உறுதி செய்கிறது. சட்ட ஒழுங்கும் முற்றிலும் சீர்கெட்டு இருக்கின்றது," என்று கோஷ் கூறினார். 

Similar News