மேற்கு வங்காளம்: ரத யாத்திரையை முன்னிட்டு பா.ஜ.க தொண்டர்களைத் தாக்கியுள்ள குண்டர்கள்!

மேற்கு வங்காளம்: ரத யாத்திரையை முன்னிட்டு பா.ஜ.க தொண்டர்களைத் தாக்கியுள்ள குண்டர்கள்!

Update: 2021-02-26 09:38 GMT
புதன்கிழமை இரவு மேற்கு வங்காளத்தில் பர்கானா மாவட்டத்தில் மூன்று பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் திரிணாமூல் காங்கிரஸ் குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளனர். இதுபோன்று தாக்குதல் நடைபெறுவது இது முதன்முறை அல்ல. பா.ஜ.க தொண்டர்கள் மீது தொடர்ந்து TMC கும்பல் தாக்குதல் நடத்தி வருகின்றது. 

இந்த தாக்குதல் சம்பவமானது வியாழக்கிழமை நடக்கவுள்ள ரத யாத்ராவை முன்னிட்டு பா.ஜ.க தொண்டர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கும் வேளையில் நடந்துள்ளது. இந்த தாக்குதலில் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். அவர்களை மாநிலத்தின் பாட்பார பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 
பா.ஜ.க உறுப்பினர்களான ராம் அவதார் பிரசாத், அஜய் பாகத், கணேஷ் சாஹு ஆகிய மூவரும் பாரிவர்தன் யாத்ராவை முன்னிட்டு கொடிகளைத் தயார் செய்துகொண்டிருக்கும் போது தாக்கப்பட்டுள்ளது. TMC குண்டர்களின் தாக்குதலை அவதார் பிரசாத் பலத்த காயமடைந்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து காவல்துறையில் விசாரணையில் இறங்கியுள்ளது. 

மேலும் வியாழக்கிழமை பொரிபோர்ட்டன் யாத்திரைக்கு முதலமைச்சர் மம்தாவின் அறிவுறுத்தலின் படி பாரக்பூர் காவல்துறை ரத்து செய்தது என்று மேற்கு வங்காள பா.ஜ.க துணைத் தலைவர் அர்ஜுன் சிங் தெரிவித்தார். "யாத்திரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை நீதிமன்றத்தில் பெறுவோம்," என்று தெரிவித்தார். 

Similar News