பா.ஜ.க தலைவர் சுவெந்து ஆதிகாரி மற்றும் தொண்டர்கள் மீது TMC கும்பல் தாக்குதல்.!

பா.ஜ.க தலைவர் சுவெந்து ஆதிகாரி மற்றும் தொண்டர்கள் மீது TMC கும்பல் தாக்குதல்.!

Update: 2020-12-29 19:34 GMT

செவ்வாயன்று நந்திக்ராம் பகுதியில் தெங்காவிலிருந்து ஜானகிநாத் கோவிலுக்குச் சென்ற பா.ஜ.க தலைவர் சுவெந்து ஆதிகாரி மற்றும் பா.ஜ.க தொடர்கள் மீது TMC கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. 

அறிக்கையின் படி, சுவெந்து ஆதிகாரி திரிணமூல் காங்கிரஸில் இருந்து பா.ஜ.கவில் சென்ற பிறகு முதன்முறையாக நந்திக்ராமுக்கு வருகைதந்துள்ளார். இவர் தனிப்பட்ட விவகாரத்திற்காக வருகைதந்தாலும் இவரைக் காண பா.ஜ.க தொண்டர்கள் வந்திருந்தனர். அவர்கள் கார் மற்றும் பேருந்துகளில் வந்திருந்தனர். இருப்பினும் சுவெந்து ஆதிகாரி மற்றும் தொண்டர்கள் பூட்டோ நிலையத்தில் வைத்து TMC கும்பலால் தாக்கப்பட்டனர். 

Full View

அவர்கள் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தினர். தாக்குதலின் போது அவர்கள் வந்திருந்த பேருந்தும் சூறையாடப்பட்டது. சிறுமிகள் உட்படப் பலரும் தலையில் காயமடைந்தனர். அவர்கள் நந்திக்ராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுவெந்து ஆதிகாரி படி, 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதில் சில தொண்டர்களைக் காணவில்லை என்றும் பா.ஜ.க தெரிவித்துள்ளது. 

மதச்சார்பு கூட்டத்தில் உரையாடிய சுவெந்து ஆதிகாரி, கும்பல் கைது செய்யப்படவில்லை என்றால் பெரிய போராட்டம் நடைபெறும் என்று அவர் எச்சரித்தார். மேலும், "இதுபோன்ற தாக்குதலை எங்களால் சகித்துக்கொள்ள இயலாது. குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் இல்லையென்றால் பெரிய போராட்டம் நடைபெறும்," என்று அவர் கூறினார். 

சனிக்கிழமை அன்று பா.ஜ.க மற்றும் TMC தொண்டர்களுக்கு இடையே தாக்குதல் நடைபெற்றது. TMC கும்பல் பா.ஜ.க தலைவர்களின் வாகனங்களைத் தாக்கினர். இந்த தாக்குதலுக்குப் பல பா.ஜ.க தலைவர்களிடம் இருந்து கண்டங்களைப் பெற்றதோடு மற்றும் இதற்கு காவல்துறை உடந்தை என்றும் கூறியது. 

Similar News