மேற்கு வங்காளம்: பா.ஜ.க பேரணியில் மீண்டும் TMC கும்பல் கல் வீச்சு தாக்குதல்!

மேற்கு வங்காளம்: பா.ஜ.க பேரணியில் மீண்டும் TMC கும்பல் கல் வீச்சு தாக்குதல்!

Update: 2021-01-20 18:26 GMT
கொல்கத்தாவில் சாரு சந்தை பகுதியில் பா.ஜ.க நடத்திய பேரணியை TMC தொண்டர்கள் கற்களை எரிந்து அமைதி பேரணியைச் சீர்குலைத்துள்ளனர். மேலும் அவர்கள் திரும்பிச் செல் என்ற கோஷங்களையும் எழுப்பினர். இவ்வாறு மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க தொண்டர்கள் அமைதியாக  நடத்தும் பேரணியை TMC தொண்டர்கள் தாக்குவது முதல் முறை அல்ல. 
இந்த பேரணியில் மத்திய அமைச்சர் தேவஸ்ரீ சவுதாரி, மாநில பா.ஜ.க தலைவர் திலீப் கோஷ் மற்றும் முதல்வர் மம்தா பனர்ஜீயின் முன்னாள் நெருங்கிய உதவியாளரும் மற்றும் சில நாட்களுக்கு முன்பே TMC யில் இருந்து பா.ஜ.க விற்கு மாறிய சுபேந்து அதிகாரி போன்றவர்கள் கலந்து கொண்டனர். 
காவல்துறையின் அறிக்கையின் படி, பேரணியின் போது சில அடையாளம் தெரியாத நபர்கள் பா.ஜ.க தொண்டர்கள் மீது செங்கல் மற்றும் கற்களை எறிந்துள்ளனர் இதனால் பலர் காயமடைந்தனர். மேலும் இதனால் கோபமடைந்த பா.ஜ.க தொண்டர்கள் குற்றவாளிகளை விரட்டி சென்றனர் ஆனால் அவர்கள் தப்பிச் சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளனர். 
மேலும் இந்த சம்பவத்தைக் கட்டுக்குள் கொண்டுவர அதிக காவலர்கள் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்துப் பேசிய சுபேந்து அதிகாரி, "மினி பாகிஸ்தான் மற்றும் கொல்கத்தாவை கார்பொரேஷனை சேர்ந்தவர்கள் கற்களை வீசினர். இந்த பேரணிக்கு காவல்துறையின் அனுமதி பெறப்பட்டது இருப்பினும் அவர்கள் கற்களை வீசினர். மேற்கு வங்காள மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர் அதனால் அவர்கள் எங்களுடன் இருக்கின்றனர்," என்று கூறினார். 
இந்த தாக்குதலை ஜனநாயகத்தின் மீதான நேரடி தாக்குதல் என்று மாநில பா.ஜக தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் மூலம் மீண்டு மேற்கு வங்காளத்தில் ஜனநாயகத்திற்கு இடமில்லை என்று நிரூபித்துள்ளது. முன்னர் எங்கள் கட்சித் தலைவர் தாக்குதலுக்கு உள்ளானார். தற்போது எங்கள் பேரணி மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது," மாநில பா.ஜ.க தலைவர் திலீப் கோஷ் தெரிவித்தார். 

மேலும், "TMC உறுப்பினர்கள் தொடர்ந்து பா.ஜ.க பேரணி மீது தாக்குதல் தங்கள் உண்மை முகத்தை நிரூபித்து வருகின்றனர், இது ஜனநாயகத்தின் மீதான நேரடி தாக்குதல், " என்று டிவிட்டரில் தெரிவித்துள்ளனர். மேலும் பா.ஜ.கவின் தேசிய செயலாளரும் மற்றும் மேற்கு வங்காளத்தின் பொறுப்பாளருமான கைலாஷ் விஜய்வர்கியா ஒரு வீடீயோவை பகிர்ந்து கொண்டார், "அதில் மேற்கு வங்காள துரோகிகளைச் சுட்டுக் கொல்லுங்கள்," என்று கூறப்பட்டிருந்தது.
 
தற்போது மேற்கு வங்காளத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் மற்றும் கட்சிக்கு எதிரான உணர்வுகள் அதிகரித்து வருவதாலும் மம்தா பனர்ஜீ மற்றும் அவரது தொண்டர்கள் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள அரசியல் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். 

Similar News