விவசாய சங்க தலைவர் பல்தேவ் சிங் மீது NIA விசாரணை - பின்னணி என்ன?

விவசாய சங்க தலைவர் பல்தேவ் சிங் மீது NIA விசாரணை - பின்னணி என்ன?

Update: 2021-01-16 18:30 GMT

தற்போது டெல்லியில் நடைபெற்று வரும் மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் பங்குபெற்றுள்ள விவசாய தலைவர் பல்தேவ் சிங் சிரஸாவுக்கு விசாரணைக்காகத் தேசிய புலனாய்வு அமைப்பு(NIA) ஜனவரி 17 க்கு அழைத்துள்ளது. 

சம்மனை உறுதி செய்து ஆனால் அவர் ஒரு சாட்சிக்காக வரவழைக்கப்பட்டுள்ளார் என்று NIA அதிகாரி தெரிவித்துள்ளார். "CRPC சட்டம் 160 கீழ் சாட்சியான சம்மன் அறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது," என்று NIA அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த சம்மனானது NIA டிசம்பர் 15 2020 யின் கீழ் பதிவு செய்த FIR உடன் தொடர்புடையது. அந்த FIR யில் சீக்கியர்களுக்கான நீதி, காலிஸ்தான் ஜிந்தாபாத் அமைப்பு, சர்வதேச பாப்பார் கால்ஸா போன்ற காலிஸ்தான் அமைப்புகள் போன்றவை நாட்டில் அச்சமிகுந்த சதித்திட்டத்தை உண்டாக்குகின்றது போன்ற குற்றச்சாட்டைக் கொண்டுள்ளது.

மேலும் மக்களிடையே அச்சத்தை உண்டாக்கி மற்றும் இந்திய அரசாங்கத்திற்கு எதிராக வெறுப்பினை தூண்டிவருகின்றது என்னும் குற்றச்சாட்டையும் கொண்டுள்ளது. 

மேலும் அந்த FIR யில் UAPA கீழ் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள், "பெரியளவிலான நிதிகளைத் தன்னார்வ தொண்டுகள் மூலம் போராட்டத்திற்கு அனுப்பி வருகின்றது மற்றும் அமெரிக்கா, கன்னடா, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் இந்திய மிஷன் வெளியே இந்திய அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்புகளை வெளிப்படுத்துகின்றது," என்று கூறப்பட்டுள்ளது.

இந்த பிரச்சாரங்களைப் பரப்புவதாக  குர்பந்த்வான்ட் சிங் பன்னுந், பரம்ஜித் சிங் பம்மா மற்றும் ஹர்பித் சிங் நிஜ்ஜார் உள்ளிட்டவர்களின் பெயரைப் பதிவு செய்துள்ளது. "இதன் மூலம் சேகரிக்கப்பட்ட நிதிகள் தன்னார்வ தொண்டுகள் மூலம் காலிஸ்தான் அமைப்பு இந்தியாவில் வன்முறை மற்றும் பயங்கரவாதத்தைத் தூண்ட அனுப்புகின்றது," என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மீத ள்ள நபர்களுக்கும் சம்மன் அனுப்பப்படும் என்று NIA செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். பல்தேவ் சிங் சிரஸா சிங்கு எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றார். மேலும் விவசாய போராட்டத்தில் சீக்கியர்கள் நீதி குறித்து மத்திய அரசு திங்கட்கிழமை அன்று உச்ச நீதிமன்றத்தில் பத்திரம் தாக்கல் செய்யும் என்று எதிர்ப்பாக்கப்படுகின்றது. SFJ நிதி பங்களிப்பு குறித்தும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்று எதிர்ப்பாகப் படுகின்றது. 

Similar News