இந்தியாவில் 16 லட்சத்திற்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் கணக்குகளுக்கு தடை - ஏன்?

Update: 2022-06-02 07:15 GMT

வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 16 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய பயனர்களின் கணக்குகளைத் தடை செய்திருப்பதாக அந்நிறுவனம் தனது மாதாந்திர அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக வாட்ஸ்அப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வாட்ஸ்அப் பயனர்கள் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் நிறுவனம் 122 கணக்குகளை தடை செய்திருக்கிறோம். அதே நேரத்தில் வாட்ஸ்அப்பில் தீங்கு விளைவிக்கின்ற செயல்பாட்டினையும் தடுப்பதற்காக 16.66 லட்சம் கணக்குகளைத் தடை செய்திருக்கிறோம்.

மேலும், நாங்கள் குற்றம் நடைபெறுவதை தடுப்பதை கவனத்தை செலுத்தி வருகின்றோம். அதாவது தீங்கு ஏற்பட்ட பின்னர் அதனைக் கண்டறிவதை விட, தீங்கு விளைவிக்கும் செயல்களை முதலில் தடுப்பது மிகச் சிறந்தது ஆகும். இவ்வாறு வாட்ஸ்அப் நிறுவனம் தனது விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

Source: Maalaimalar

Image Courtesy:Dinamani

Tags:    

Similar News