இந்தியாவின் முதலாவது தனியார் தங்கச் சுரங்கம் செயல்பாடு எப்போது?- டெக்கான் நிறுவனம் இயக்குனர் தகவல்!
இந்தியாவின் தனியார் தங்கச் சுரங்கம் அடுத்த ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வருவதாக டெக்கான் நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தின் ஜோன்னாகிரியில் ஜியோ மைசூர் சர்வீசஸ் இந்தியா என்ற நிறுவனம் முதலாவது தனியார் துறை தங்க சுரங்கம் ஒன்றை உருவாக்கி வருகிறது. இதில் 40 சதவீத பங்குகளை டெக்கான் கோல்டு மைன்ஸ் நிறுவனம் வைத்துள்ளது. இந்த சுரங்கம் தற்போது மாதந்தோறும் ஒரு கிலோ தங்கத்தை உற்பத்தி செய்து வருகிறது .
இந்த தங்க சுரங்கம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் எனவும் அப்போது ஆண்டுக்கு 750 கிலோ தங்கம் உற்பத்தி செய்ய முடியும் என்றும் டெக்கான் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஹனுமா பிரசாத் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் ஜோன்னாகிரி திட்டம் அடுத்த ஆண்டு அக்டோபர் நவம்பர் மாதங்களில் செயல்பாட்டுக்கு வரும். இந்த சுரங்கம் 2013 இல் வழங்கப்பட்டது . இந்த திட்டத்தின் ஆய்வுகளை முடிக்க சுமார் பத்து ஆண்டுகள் ஆயிற்று என தெரிவித்தார்.
SOURCE :DAILY THANTHI