யாருக்கு உண்மையில் வெற்றி: கேரள உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் கூறுவது என்ன?

யாருக்கு உண்மையில் வெற்றி: கேரள உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் கூறுவது என்ன?

Update: 2020-12-19 08:13 GMT

கேரளாவில் உள்ளாட்சி தேர்தல்களில் தற்போது இடதுசாரி முன்னணி பெற்றுள்ள அதிக வெற்றி அவர்களின் வரும் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்துக்கு ஒரு நன்மையை பெற்றுத் தரக் கூடும், ஆனால் ஒட்டுமொத்த முடிவுகளை கணக்கில் எடுத்துக் கொள்ளும்போது எந்தவொரு முன்னணியும் பெரும்பான்மை பெற முடியாது என்பதையே முடிவுகள் வெளிப்படுத்துவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

ஆளும் இடது சாரிகள் ஜனநாயக முன்னணி,  கேரள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் மீண்டும் ஒரு வெற்றியை கணிசமான அளவில் பெற்றுள்ளது.

இந்நிலையில் பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தனது நிலையை மேம்படுத்திக் கொண்டது, அதே நேரத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி  ஏற்கனவே இருந்த இடங்களை இழந்து ஒரு வருந்தத்தக்க நிலைக்கு சென்றுவிட்டதாகவே கூறப்படுகிறது. 

கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணியான எல்.டி.எஃப், கிராம பஞ்சாயத்துகளில் சென்ற 2015 ஆம் ஆண்டு தேர்தலில்  546 இடங்களைப் பிடித்தது. ஆனால் நடந்து முடிந்த தேர்தலில் 514 இடங்களை மட்டுமே பிடித்தது. அதே நேரத்தில் காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் 2015 தேர்தலில் 377 இடங்களைப் பிடித்தது. 

ஆனால் இப்போது 366 இடங்களில் மட்டுமே வென்றது. ஆனால் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணிக்கு சென்ற 2015 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் 13 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஆனால் நடைபெற்று முடிந்த தேர்தலில்  22 கிராம் பஞ்சாயத்துகளை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

வார்டுகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை மொத்த எண்ணிக்கை 15,962 ஆகும். இதில் எல்.டி.எஃப் 7,266 வார்டுகளை வென்றுள்ளன.  யு.டி.எஃப் 5,893 வார்டுகளை வென்றுள்ளன. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 1,179 வார்டுகளை வென்றுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான யுடிஎப்பைப் பொறுத்தவரை, நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் இதற்கு சரிவு  ஏற்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில், 6 மாநகராட்சிகளில் கண்ணூர் மாநகராட்சியை மட்டுமே காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. அதே நேரத்தில் இடதுசாரிகள் கூட்டணி திருவனந்தபுரம், கொச்சி, கொல்லம், திருச்சூர் மற்றும் கோழிக்கோடு கார்பரேஷன்களை கைப்பற்றியுள்ளது.

கொச்சியில் அதன் மேயர் வேட்பாளர் பாஜகவிடம் தோற்றதும், காங்கிரஸ் மாநிலத் தலைவர் மலப்பள்ளி ராமச்சந்திரனின் வார்டில் இடதுசாரிகள் கூட்டணி வென்றதும் காங்கிரஸ் கட்சிக்கு துயரங்களை அதிகரித்தது.

மதிப்புமிக்க திருவனந்தபுரம் மாநகராட்சி தேர்தலை பொறுத்தவரை சென்ற 2015 ஆம் ஆண்டு 35  வார்டுகளை வென்ற பாஜக மாநகராட்சியை கைப்பற்றியது. ஆனால் இந்த முறை 34 வார்டுகளை மட்டுமே பெற்று மாநகராட்சியை கம்யூனிஸ்டுகளிடம் இழந்து இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டது.  

இருப்பினும், இது சிபிஎம்மின் கோட்டையான கண்ணூர் கார்ப்பரேஷனில் ஒரு தனி இடத்தை பிடித்து முதன் முதலாக நுழைந்துள்ளது பாஜக .

எல்.டி.எஃப் 11 மாவட்ட பஞ்சாயத்துகளைவென்றுள்ளது., இது கடந்த முறை ஏழு மாவட்ட பஞ்சாயத்துக்களை பிடித்தது , அதே சமயம் காங்கிரஸ் கூட்டணியான யு.டி.எஃப் மீதமுள்ள மூன்றை வென்றுள்ளது.

போட்டியிட்ட 87 நகராட்சிகளில், பாஜக பாலக்காடு நகராட்சியைத் தக்கவைத்து சாதனை படைத்துள்ளது.  அதே நேரத்தில் 10 வயதுக்கு மேற்பட்ட , 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை 2018 ஆம் ஆண்டில் சபரிமலை அய்யப்பா கோயிலுக்குள் அனுமதித்ததற்காக இடதுசாரிகள் கூட்டணி மீது அப்பகுதி மக்கள் கடும் கோபமடைந்தனர். அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் மையப்பகுதியான இந்த பந்தளம் பகுதியை பாஜக கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நகராட்சிகளைப் பொறுத்தவரை இடதுசாரிகள் கூட்டணி 35 நகராட்சிகளை பிடித்துள்ளது. என்றாலும் இது 2015 ல் இருந்து ஆறு இடங்கள் குறைந்துள்ளது, அதே நேரத்தில் காங்கிரஸ் கூட்டணி 45 ஐப் பெறுகிறது, கடந்த முறையை விட இப்போது நான்கு அதிகரித்துள்ளது.

எவ்வாறாயினும், 37 நகராட்சி வார்டுகளில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது, இதை ஒரு புதிய தொடக்கமாகவும், எதிர்கால வாய்ப்புக்கான உற்சாகமாகவும் பாஜக கருதுகிறது. 

பாஜக கூட்டணி காசர்கோட் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளது, இது யுடிஎப்பின் முக்கிய அங்கமான ஐ.யூ.எம்.எல்., பதியாட்கா மற்றும் கும்படஜே பஞ்சாயத்துகளை வென்றுள்ளது.கேரளாவில் பாஜகவின் வளர்ச்சி உண்மையில்  சில பஞ்சாயத்துகளுக்கும் நகராட்சிகளுக்கும் புதிதாக செல்ல வழிவகுத்தது.

இதில் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் என்ன வென்றால் காங்கிரசின் திருச்சூர் மேயர் வேட்பாளர் பி கோபாலகிருஷ்ணனை பாஜக வேட்பாளர் தோற்கடித்தார் என்பதுதான்.

இந்நிலையில்  2021 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் இன்னும் ஐந்து மாதங்களுக்குள் வரவுள்ளன. அதில் சிபிஎம் மற்றும் பாஜக இடையே நேரடிப் போட்டி உருவாகும் என்று பாஜக மாநில தலைவர் சுரேந்திரன் கூறியுள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் கேரளாவில் ஆதிக்கம் செலுத்தும் நாயர் சமூகம் பாஜகவை நோக்கிச் செல்கிறது என்பதற்கான அறிகுறிகளாகும் என்றும், அதே நேரத்தில் காங்கிரஸ் போக்கில் கிறிஸ்தவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என்றும் கூறபபடுகிறது. அதே சமயம்  கேரள காங்கிரஸ் (மணி) ஜோஸ் பிரிவு  கம்யூனிஸ்டுகளுடன் கூட்டு சேர்ந்ததால் காங்கிரஸ் அதிக இடங்களை இழந்ததாக கூறபபடுகிறது. 

ஜோஸ் தலைமையிலான மணி பிரிவு, மத்திய கேரள பிராந்தியத்தில், குறிப்பாக கோட்டயம், ஆலப்புழா மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள அதன் தளங்களுக்கு நிறைய வித்தியாசங்களை ஏற்படுத்தியுள்ளது.

வரும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கவும், பிரச்சாரத்தை எதிர்கொள்ளவும் கம்யூனிஸ்டுகளுக்கு இந்த தேர்தல் பயன்பட்டிருக்கலாம், ஆனால் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மூன்று கூட்டணியில் எந்த ஒரு கூட்டணிக்கும் பெரும்பான்மையை தராது என கூறப்படுகிறது. ஏனெனில் பாஜக தலைமையிலான மூன்றாம் அணியின் வளர்ச்சி இப்போது இரு பெரிய கட்சிகளின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதாக வளர்ந்துள்ளது எனக் கூறபபடுகிறது.

Similar News