2ம் கட்டத்தில் யார்.. யாருக்கு.. கொரோனா தடுப்பூசி போடப்படும்.. உத்தேச பட்டியல்.!

2ம் கட்டத்தில் யார்.. யாருக்கு.. கொரோனா தடுப்பூசி போடப்படும்.. உத்தேச பட்டியல்.!

Update: 2021-01-21 13:08 GMT

இந்தியா முழுவதும் கடந்த 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக முன்களப் பணியாளர்கள் மற்றும் சர்க்கரை மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு போடப்பட்டது. இதனை தொடர்ந்து அடுத்த கட்டத்தில் யார் யாருக்கு தடுப்பூசி போட வேண்டும் என்ற பட்டியலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தயார் செய்து வருகிறது.

2ம் கட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு தடுப்பூசி போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 15,223 பேருக்கு புதியதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் 1 கோடியே 6 லட்சத்து 10 ஆயிரத்து 883 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது வைரஸின் தாக்கம் குறைந்து வருகிறது என்றாலும், பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணிந்து கொண்டே வெளியில் செல்ல வேண்டும் என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Similar News