சட்டதிருத்தங்கள் மேற்கொள்ளப்படுவது ஏன்? வடகிழக்கு மாநிலங்களின் தலைவிதியை மாற்றி எழுதிய மத்திய அரசு!

சட்டதிருத்தங்கள் மேற்கொள்ளப்படுவது ஏன்? வடகிழக்கு மாநிலங்களின் தலைவிதியை மாற்றி எழுதிய மத்திய அரசு!

Update: 2021-01-03 07:25 GMT
வடகிழக்கு பகுதிகளுக்கான ஒதுக்கீட்டில் 30 சதவீதத்தை, பின்தங்கிய மக்களின் மேம்பாட்டுக்கும், பின்தங்கிய பகுதிகளின் மேம்பாட்டுக்கும் பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

இதேபோல் பின்தங்கிய சமூகத்தினர் மற்றும் பின்தங்கிய பகுதிகளுக்கான பல திட்டங்களில் கவனம் செலுத்தப்பட்டன.  இதனால் 2019 - 2020-ஆம் நிதியாண்டில் வடகிழக்கு பகுதி மேம்பாட்டு அமைச்சகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி முழுவதும் பயன்படுத்தப்பட்டது.

நாட்டின் 35 சதவீத மூங்கில் வளர்ப்பு பகுதிகள் வடகிழக்கு மாநிலங்களில் உள்ளன. வன சட்டத்தின் கீழ் மூங்கில் கொண்டு செல்வதற்கு கட்டுப்பாடுகள் உள்ளதால், இங்குள்ள மூங்கில் வளம் முழுவதும் பயன்படுத்தப்படவில்லை.

இதனால் இந்திய வனச் சட்டத்தில் மரங்கள் பிரிவில் இருந்து மூங்கிலை அகற்றி, புல் இனத்தில் மத்திய அரசு சேர்த்தது. இந்த முடிவால், வடகிழக்கு பகுதியில் மூங்கில் மேம்பாட்டில் முக்கிய மாற்றம் ஏற்பட்டது. மூங்கில் அதிகளவு பயிரிடப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.

இதேபோல் மற்றொரு சீர்திருத்தமும் மேற்கொள்ளப்பட்டது. மூங்கில் குச்சிகளுக்கான இறக்குமதி வரி 10 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. இது அகர்பத்தி குச்சி தயாரிப்பு ஆலைகள் உள்நாட்டில் உருவாக வழி வகுத்தது.

கடந்த 2019 செப்டம்பரில் இருந்து பத்தி குச்சி இறக்குமதி செய்யப்படவில்லை. உள்ளூர் மூங்கிலே பயன்படுத்தப்படுகிறது. வடகிழக்கு மாநிலங்களில் சாலை, ரயில் மற்றும் விமான போக்குவரத்து மேம்படுத்தப்பட்டு மக்கள் மற்றும் சரக்கு போக்குவரத்து மேம்படுத்தப்பட்டது.

உள்கட்டமைப்பு, எரிசக்தி மற்றும் இதர துறைகளும் வளர்ச்சி கண்டுள்ளன. வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசு ரூ.53,374 கோடி வழங்கியுள்ளது. அங்கு இந்திரா தனுஸ் எரிவாயு விநியோகத் தொகுப்பு திட்டத்துக்கு ரூ.9265 கோடி அனுமதிக்கப்பட்டது. அருணாச்சலப் பிரதேசத்தில் ஹோலங்கி விமான நிலையம் ரூ.955.67 கோடியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது 2022 டிசம்பர் மாதம் முடிவடையும்.

Similar News