PFI மற்றும் துணை அமைப்புகளுக்கு தடை ஏன்?

PFI மற்றும் துணை அமைப்புகளுக்கு மத்திய அரசாங்கம் தடை விதித்ததற்கான காரணம் இது தான்.

Update: 2022-09-29 01:48 GMT

PFI அமைப்பு மற்றும் அதன் துணை அமைப்பில் தொடர்பில் இருந்த அனைவரும் நிதி திரட்டி வழங்குவது அந்த நிதியை சட்டம் விரோதமான செயல்களுக்கு பயன்படுத்துவது போன்று பல்வேறு செயல்களில் மறைமுகமாக ஈடுபட்டு வந்தார்கள். பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகள் சமூகப் பொருளாதார, கல்வி சார்ந்த பணிகளை செய்வதாக வெளியில் தெரிவித்துக் கொண்டு, உண்மையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்காக பணியாற்றுகிறார்கள். சமூகத்தில் அரசியலமைப்புச் சட்டம் அரசியலமைப்பையும் அவமரியாதை செய்யும் விதமாகவும் அவர்களுடைய அமைப்பின் செயல்கள் அமைந்திருக்கிறது.


PFI அமைப்பும் அதன் துணை அமைப்புகளும் சாட்டின் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டுள்ளன. மேலும் நாட்டின் ஒற்றுமை, இறையாண்மை, பாதுகாப்பு, அமைதி, சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக இதனுடைய நடவடிக்கைகள் ஈடுபட்டுள்ளது. இதன் காரணமாக மத்திய அரசாங்கம் இந்த அமைப்புகளுக்கு ஐந்தாண்டு காலம் வரை தடை விதித்துள்ளது. ஜமாத் உல் முஜாகிதீன் பங்களாதேஷ் அமைப்புடன் PFI அமைப்புக்கு தொடர்பு உள்ளது. இது குறித்து மத்தியில் அரசு சார்பில் கூறப்படுபையில் சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட IS தீவிரவாத அமைப்புடன் PFI அமைப்பு தொடர்பு கொண்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


மேலே குறிப்பிட்ட இந்த காரணங்களுக்காக மத்திய அரசுடன் ஆலோசித்து, சட்ட விரோதமான செயல்களை தடுப்புச் சட்டம் 1967 மற்றும் பிரிவு மூன்று ஆகியவற்றின் அடிப்படையில் இந்த PFI அமைப்பு மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த ஒரு முடிவை வரவேற்கும் விதமாக அனைத்து கட்சிகளும் செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

Input & Image courtesy: Asianet News

Tags:    

Similar News