கொரோனா ஓய்ந்ததும் குடியுரிமை திருத்த சட்டம் அமல் - அதிரடி காட்டும் அமித்ஷா!

Update: 2022-05-06 00:13 GMT

இந்தியாவுக்கு அகதிகளாக வருகை தந்துள்ள மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குகின்ற வகையில் கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச்சட்டம் ஏற்படுத்தப்பட்டது.

இந்த சட்டத்தின் மூலமாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளில் உள்ள சிறுபான்மையினர் மதரீதியில் ஏதாவது பிரச்சினைகளை சந்திக்கும் பட்சத்தில் அவர்கள் இந்தியாவுக்கு வந்தால் குடியுரிமை கிடைக்கும். அதன்படி இந்து, சீக்கியம், புத்தம், ஜெயின், பார்சீ, கிருஸ்தவம் உள்ளிட்ட மதங்களை சேர்ந்தவர்களுக்கும் குடியுரிமை வழங்கப்படும். இதற்கு மத்தியில் குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது சட்டம் நடைமுறைக்கு வராமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று (மே 5) மேற்கு வங்கம் மாநிலம், கொல்கத்தா அருகே உள்ள சிலிகுரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, குடியுரிமை திருத்தச்சட்டம் நடைமுறைக்கு வராது என்று திரிணாமுல் காங்கிரஸ் மக்களிடம் புரளியை கிளப்பி வந்தது. ஆனால் நான் சொல்கிறேன், கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வந்த உடன் குடியுரிமை திருத்தச்சட்டத்தை நாங்கள் நடைமுறை படுத்துவோம். மம்தா பானர்ஜி ஊடுருவலை விரும்புகிறார். ஆனால் குடியுரிமை திருத்தச்சட்டம் இப்போது மட்டுமின்றி, எப்போதும் நடைமுறைப்படுத்தப்படும். இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News