கொரோனா தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு இந்தியா ஒப்புதல் - உலக சுகாதார அமைப்பு பாராட்டு!

கொரோனா தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு இந்தியா ஒப்புதல் - உலக சுகாதார அமைப்பு பாராட்டு!

Update: 2021-01-03 18:25 GMT
இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் (DCGI) சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் கோவிஷீல்ட் தடுப்பூசி மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் ஆகியவற்றை கொரோனா வைரஸுக்கு எதிராக அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்த சில நிமிடங்களில், உலக சுகாதார அமைப்பு இந்த முடிவை வரவேற்றது. உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியா பிராந்தியத்தின் இயக்குனர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் அளித்த அறிக்கையில், "உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியா பிராந்தியத்தில் கொரோனா தடுப்பூசிக்கு வழங்கப்பட்ட முதல் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை வரவேற்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

"இந்தியா இன்று எடுத்த இந்த முடிவு பிராந்தியத்தில் கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தவும் வலுப்படுத்தவும் உதவும். முன்னுரிமை பெற்ற மக்களில் தடுப்பூசி பயன்படுத்துவதோடு, பிற பொது சுகாதார நடவடிக்கைகளையும் தொடர்ந்து செயல்படுத்துவதோடு சமூக பங்களிப்பும் பாதிப்பைக் குறைப்பதிலும் இது முக்கியமானதாக இருக்கும்" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் முதலில் ஒரு கோடி சுகாதார ஊழியர்களுக்கும், இரண்டு கோடி முன்னணி மற்றும் அத்தியாவசிய தொழிலாளர்கள் மற்றும் 27 கோடி முதியவர்களுக்கும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, உலகில் இரண்டாவது மிக அதிகமான தொற்றுநோய்களைக் கொண்ட இந்தியாவுக்கு இது ஒரு பெரிய நிவாரணமாகும். அடுத்த ஆறு முதல் எட்டு மாதங்களில் முதல் கட்ட இயக்கத்தில் கிட்டத்தட்ட 30 கோடி மக்களுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

Similar News