உலக மக்கள் தொகை அதிகரிப்பு - பூமிக்கு இது ஆரோக்கியமான விஷயமா?
உலக மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக பூமி தன்னுடைய ஆக்ரோஷமான மற்றொரு முகத்தை காண்பிக்குமா?
ஐக்கிய நாட்டு சபையின் கருத்துப்படி பூமியின் உள்ள மக்கள் தொகை தற்போது 8 பில்லியன் ஆக 2022 ஆம் ஆண்டு வரை இருக்கிறது. இது அதிகரித்துக் கொண்டே தான் போகும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக பூமியில் விரைவில் அழியுமா? பூமி பாதுகாப்பது யார்? போன்ற பல்வேறு கருத்துக்களும் தற்போது முக்கியமாக பார்க்கப்பட்ட வருகின்றது. உலகில் பெருகி வரும் மக்கள் தொகையை இரண்டு விதமாக நாம் பார்க்கிறோம். ஒன்று அதிக மக்கள் தொகை ஆபத்தை ஏற்படுத்துகின்றது. மேலும் மற்றொன்று மக்கள் தொகையை நாம் அதிகரிக்க முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று கருத்து.
இரண்டு கருத்துக்களையும் ஆதரிக்க கூடிய உலக நாடுகள் தற்போது இருந்து வருகின்றன. சில நாடுகள் மக்கள் தொகையை அதிகரிப்பதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றன. மற்ற சில நாடுகள் மக்கள் தொகையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனால் இந்த இரண்டுமே தற்போது பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்துமாம், ஏனெனில் மக்கள் தொகை தற்போது 8 பில்லியனாக உயர்ந்து இருக்கிறது. இவை அதிகரிக்கும் பொழுது பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும்.
குறிப்பாக காலநிலை நெருக்கடி மற்றும் பல்லுயிர் இழப்பு, தண்ணீர் பிரச்சனை, நிலம் மீதான மோதல்கள் என நாம் ஒவ்வொரு பிரச்சனைகளையும் மனித குலத்திற்கு எதிராக மோதல்களை புரிவதற்கு வழிவகுக்கும். மனிதன் தனக்குத்தானே யுத்தம் செய்து கொண்டு பூமியில் வாழ்வதற்கான பல வழிகளை மேற்கொள்வான் என்றும் ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி கூறப்படுகிறது.
Input & Image courtesy:News