தமிழகம், கேரளாவுக்கு மஞ்சள் அலர்ட்.. அதீத மழைக்கு வாய்ப்பு.!

தமிழகம், கேரளாவுக்கு மஞ்சள் அலர்ட்.. அதீத மழைக்கு வாய்ப்பு.!

Update: 2020-12-02 09:06 GMT

வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘புரெவி’ புயல் காரணமாக தமிழம் மற்றும் கேரளாவின் தென்மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புரெவி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல், நேற்று இரவு 8.30 மணி நிலவரப்படி, இலங்கையின் திரிகோணமலையில் இருந்து 330 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது.


இன்று மாலை அல்லது இரவில் திரகோணமலை அடையும் புரெவி, மறுநாள் மன்னார் வளைகுடா வரும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனை தொடர்ந்து அதே வலுவுடன் கன்னியாகுமரி, பாம்பன் இடையே 4ம் தேதி கரையை கடக்க வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது. புயல் கரையை கடக்கும்போது 95 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசும் என்பதால், தெற்கு வங்கக்கடல் மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இந்த புயல் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் இன்றும் நாளையும் அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதே போன்று கேரளா மாநிலத்தில் உள்ள தென்மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.
 

Similar News