இனி சர்வதேச நேரத்துடன் சொடுக்கு போடலாம்! நானோ விநாடிக்குள் நேரத்தை அளவிடுவதில் இந்தியா தற்சார்பு!

இனி சர்வதேச நேரத்துடன் சொடுக்கு போடலாம்! நானோ விநாடிக்குள் நேரத்தை அளவிடுவதில் இந்தியா தற்சார்பு!

Update: 2021-01-06 07:00 GMT

உலக அளவில் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் நாடுகளின் பட்டியலில், இந்தியா, முதல் 50 இடங்களுக்குள் வந்திருப்பதோடு, அடிப்படை ஆராய்ச்சியை வலியுறுத்தக் கூடிய அறிவியல் மற்றும் பொறியியல் வெளியீடுகளிலும் இந்தியா 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.

உலகின் முன்னணி தொழில் நிறுவனங்கள் அனைத்தும், இந்தியாவில் தங்களது ஆராய்ச்சிப் பிரிவுகளை ஏற்படுத்தி வருகின்றன. சமீப ஆண்டுகளாக, இதுபோன்ற அமைப்புகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

எந்தெந்த துறைகளில் நமது ஆராய்ச்சிகள் வலிமையானவையாகவும், துல்லியமாகவும் அமைகிறோதா, அந்தத் துறைகளில் நமது அடையாளம் வலுவடையும். இது, இந்தியா மீது வலிமையான முத்திரை பதியச் செய்ய வழிவகுக்கும்.

செமி கன்டக்டர் போன்ற கண்டுபிடிப்புகளும், டிஜிட்டல் புரட்சியுடன் நமது வாழ்வை வளப்படுத்தியுள்ளன. அதுபோன்ற பல வாய்ப்புகள் நமது இளம் ஆராய்ச்சியாளர்கள் முன் உள்ளன, இதனைப் பயன்படுத்தி, தங்களது ஆராய்ச்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகள் வாயிலாக முற்றிலும் மாறுபட்ட எதிர்காலத்திற்கு வழிவகுக்க முடியும்.

போர் காலத்தில் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ட்ரோன்கள், தற்போது படப்பிடிப்புகளுக்கும் , பொருட்களை விநியோகிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. எனவே, நமது விஞ்ஞானிகள், குறிப்பாக இளம் விஞ்ஞானிகள், ஆராய்ச்சிகளை பல்வேறு துறையிலும் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும் என்பதை மத்திய அரசு ஊக்குவிக்கிறது.

சமீபத்தில் சிஎஸ்ஐஆர் - என்பிஎல்-ன் தேசிய அணு கால அளவுகோலை நாட்டுக்கு அர்ப்பணித்தது. இதனால் நானோ விநாடிக்குள் நேரத்தை அளவிடுவதில் இந்தியா தற்சார்பு அடைந்துள்ளது. 2.8 நானோ  வினாடிக்குள்,  துல்லிய நிலையை அடைவது மிகப் பெரிய திறமை. இப்போது இந்திய நிலையான நேரம், சர்வதேச நிலையான  நேரத்துடன் 3 நானோ வினாடிக்கும் குறைவான துல்லியத்துடன் பொருந்துகிறது.

அதிநவீன தொழில்நுட்பத்துடன் பணிபுரியும் இஸ்ரோ போன்ற அமைப்புகளுக்கு இது பெரிய உதவியாக இருக்கும். இந்த சாதனையால் வங்கி, ரயில்வே, பாதுகாப்பு, சுகாதாரம், தொலைத் தொடர்பு, வானிலை முன்னறிவிப்பு, பேரிடர் மேலாண்மை மற்றும் இது போன்ற  துறைகள் தொடர்பான நவீன தொழில்நுட்பங்கள்  பெரிதும் பயனடையும்.

Similar News