பிப்ரவரி 1ம் தேதி முதல் ரயில்களில் உணவு ஆர்டர் செய்யலாம்!

பிப்ரவரி 1ம் தேதி முதல் ரயில்களில் உணவு ஆர்டர் செய்யலாம்!

Update: 2021-01-30 07:15 GMT

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ரயில் சேவை முற்றிலும் தடைபட்டது. இதனிடையே தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. ஆனால் முன்பதிவு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் முன்பதிவு அல்லாத பயணத்திற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. இதனிடையே நாடு முழுவதும் படிப்படியாக ரயில் சேவைகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

மேலும், ரயில்களில் உணவு விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. ரயில் பெட்டிகளில் உணவு பெட்டி (பேண்ட்ரி கார்) இது வரையில் இணைக்கப்படவில்லை. இதனால் தொலை தூர பயணம் செய்பவர்கள் கூடவே உணவை எடுத்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் உணவு வகைகளை விற்பனை செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக மத்திய ரயில்வேத்துறைக்கும் கோரிக்கை அனுப்பப்பட்டிருந்தது. 

இந்நிலையில், ஆன்லைன் மூலமாக உணவுகளை முன்பதிவு செய்து வினியோகம் செய்வதற்கு இந்திய ரயில்வே துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்த சேவைகள் வருகின்ற பிப்ரவரி 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Similar News