உ.பி-யில் இளம் பெண் கடத்தி கட்டாய மதமாற்றம்! லவ்ஜிகாத் எதிர்ப்பு சட்டத்தின் கீழ் பாய்ந்த நடவடிக்கை!

உ.பி-யில் இளம் பெண் கடத்தி கட்டாய மதமாற்றம்! லவ்ஜிகாத் எதிர்ப்பு சட்டத்தின் கீழ் பாய்ந்த நடவடிக்கை!

Update: 2020-12-22 08:40 GMT

உத்திரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் 21 வயது பெண்ணை கடத்தி மதம் மாற்ற முயற்சித்த குற்றத்திற்காக இரண்டு நபர்களை கைது செய்ததாக போலீசார் ஞாயிற்றுக்கிழமை கூறினர்.

உத்திர பிரதேச மாநிலத்தின் புதிய மதமாற்ற எதிர்ப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மொஹ்சின் மற்றும் சாதிக் ஆகியோரும்  'நிகா' (திருமணம்) ஏற்பாடுகளை செய்திருந்தனர். பெண் கண்டுபிடிக்கப்பட்டு, இருவரையும் சிறைக்கு அனுப்பியுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு (எஸ்.பி) எஸ் ஆனந்த் தெரிவித்தார்.

"அந்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் சனிக்கிழமை புகார் அளித்தனர். குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரில் இருவர் - மொஹ்சின் மற்றும் சாதிக் கைது செய்யப்பட்டனர், மேலும் அந்த பெண் கண்டுபிடிக்கப்பட்டார். இருவரும் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்" என்று அந்த அதிகாரி கூறினார்.

அந்த பெண் கத்ரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஸ்லியா கிராமத்தில் ஒரு செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்தார், அவர் சனிக்கிழமை கடத்தப்பட்டார் என்று எஸ்.பி தெரிவித்துள்ளார்.

"உத்தரபிரதேசஅரசு 2020 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக மத மாற்றுவதற்கான கட்டளைச் சட்டம்" கீழ் உள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்தப் பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளார், குற்றம் சாட்டப்பட்ட மூன்றாவது நபரை கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக எஸ்.பி தெரிவித்துள்ளார்.

Similar News