கிரிப்டோ கரன்சியில் அதிக முதலீடு செய்யும் இந்திய இளைஞர்கள்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறும் அறிவுரை?

இந்தியாவில் தற்பொழுது கிரிப்டோ கரன்சிகளில் அதிக இளைஞர்கள் முதலீடு செய்வதற்கு நிதி அமைச்சர் தற்பொழுது அறிவுரை ஒன்றை கூறியிருக்கிறார்.

Update: 2023-02-23 11:56 GMT

அதிக அளவில் தற்போது இந்தியர்கள் கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்து வருகிறார்கள் குறிப்பாக இந்திய இளைஞர்கள் அதிக அளவில் இதில் முதலீடு செய்து வருவதை நிதி அமைச்சகம் கவனத்து வருகிறது. எனவே நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் அதிகமாக கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள் என்று இளைஞர்களுக்கு தற்பொழுது எச்சரிக்கை விடுத்து இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்தது. குறிப்பாக அதிக லாபம் வரும் என்ற ஒரு நோக்கில் அதிக அளவில் இதில் முதலீடு செய்பவர்கள் தங்களுடைய எதிர்பார்ப்பை கூறி வருகிறார்கள்.


இந்தியாவில் இருக்கும் இளைஞர்கள் குறுகிய காலத்தில் மிகப்பெரிய பணக்காரர்களாக மாறும் வழிகளில் ஒன்றாக கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு ஒன்றாக கருதி வருகிறார்கள். குறிப்பாக ஜெய்ப்பூரை சேர்ந்த இரண்டாம் ஆண்டு வணிகவியல் படிக்கும் ராகுல் என்ற மாணவர் ஒருவர் கிரிப்டோ கரன்சியில் 5000 முதலீடு செய்து இருக்கிறார். சில குறுகிய காலங்களில் அவர் பல லட்சம் ரூபாய்களை லாபமாக பெற்று இருக்கிறார். இதன் காரணமாக இவர் தன்னுடைய உறவினர்களுக்கு மற்றும் நண்பர்களுக்கு கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என்று அறிவுரை கூறியிருக்கிறார். அதன்படி அவர் அவர்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முதலீடு செய்து நஷ்டத்தை சந்தித்து இருக்கிறார்கள்.


பெற்றோர்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை இளைஞர்கள் இப்படி கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்வது அதிக அபாயத்தை ஏற்படுத்தும். எனவே முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும் என்று அவர் அறிவுரை கூறியிருக்கிறார். கிரிப்டோவில் முதலீடு செய்ய வேண்டாம் என்பது குறித்து விழிப்புணர்வை நாங்கள் ஏற்படுத்தி வருகிறோம் என்றும் விரைவில் பாராளுமன்றத்தில் இது குறித்த மசோதா நிறைவேறும் என்றும், கிரிப்டோ என்பது ஒரு ஆபத்தான முதலீடு என்பதை மக்களை எச்சரிக்கும் வகையில் பிரச்சாரமாக செய்து வருகிறோம் என்றும் தெரிவித்தார்.

Input & Image courtesy: Bhoomitoday

Tags:    

Similar News