உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் காலமானார்.. மிசோராம் முதலமைச்சர் இரங்கல்.!

உலகின் மிகப்பெரிய குடும்பமாக கருதப்படும் குடும்பத்தின் தலைவர் ஜியோனா சானா தனது 76 வயதில் உயிரிழந்துள்ளார் என்று மிசோராம் மாநில முதலமைச்சர் ஜோரம் தங்கா தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Update: 2021-06-14 04:34 GMT

உலகின் மிகப்பெரிய குடும்பமாக கருதப்படும் குடும்பத்தின் தலைவர் ஜியோனா சானா தனது 76 வயதில் உயிரிழந்துள்ளார் என்று மிசோராம் மாநில முதலமைச்சர் ஜோரம் தங்கா தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மிசோசரம், பக்தாவங் தங்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜியோனா சானா. இவருக்கு 38 மனைவிகள், 89 குழந்தைகள் மற்றும் 33 பேரக்குழந்தைகள் இருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.


 



இத்தனை நபர்களும் ஒரே இடத்தில் வசித்து வந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 4மாடி கட்டிடம் வீட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட அறைகளில் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். இதனால் ஜியோனா வசித்து வரும் வீடு, மிசோராம் மாநிலத்தின் சுற்றுலா தளமாகவும் மாறியது. இவரின் வீட்டைச் சுற்றிப் பார்க்க வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் வருவது வழக்கம்.


 



இதனிடையே, சமீபத்தில் ரத்த அழுத்தம், நீரிழிவு பிரச்சனை காரணமாக மிசோரம் தலைநகர் ஐஸ்வாலில் ட்ரினிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜியோனா, நேற்று உயிரிழந்தார். இவரின் மறைவு குறித்து மிசோரம் முதலமைச்சர் ஜோரம் தங்கா தனது ட்விட்டர் பதிவில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Similar News