கட்டாயம் இந்த உணவுப்பொருட்களை பிரிட்ஜில் வைத்து சாப்பிடுவது மிகவும் ஆபத்தாம்!

Update: 2021-06-11 01:14 GMT

நாம் பிரிட்ஜில் வைக்கக் கூடாத உணவுகளைப் வைத்த அவற்றை பல நாட்கள் சாப்பிடுவதன் மூலமாக நீண்டகால நோய்களுக்கு ஆளாக கூடும். உணவுகள் கெட்டுப்போகாமல் இருக்க தான் நாம் குளிர்சாதன பெட்டிகளை வாங்கவே செய்தோம். ஆனால், இப்போதோ நிலைமை என்னவென்றால் ஏதேனும் பழங்கள் அல்லது காய்கறிகளை வாங்கினால் அதை அப்படியே குளிர்சாதன பெட்டியில் வைத்துவிடுகிறோம். இதில் இந்தியர்கள் அதிக அளவில் இந்த தவற்றை பண்ணுகிறார்கள். ஆனால், அப்படி வைப்பது நல்லதல்ல. என்னென்ன உணவுபொருட்களை பிரிட்ஜில் வைக்கக்கூடாது? ஏன் வைக்கக்கூடாது? என்பதை தெரிந்துக்கொள்வோம்.


தேன் பல ஆண்டுகள் ஆனாலும் கெடாது. அதை குளிர்சாதன பெட்டியில் வைப்பதால் அது கடினமடைந்து சாப்பிட முடியாததாகிவிடும். உண்மையான தேனைப் பொறுத்தவரை, அதை காலவரையின்றி அப்படியே வைத்திருக்க முடியும். அது கெட்டுப்போகாது கவலைப்படாமல் அதை வெளியில் வைத்து நீங்கள் பயன்படுத்தலாம். அடுத்தது குறிப்பாக தக்காளியைக் பிரிட்ஜில் சேமித்து வைத்தால் அதன் முழுமையான சுவை கிடைக்காமல் போகும். தொடர்ந்து பல நாட்கள் தக்காளியைக் குளிர்சாதன பெட்டியில் வைத்தால் அதன் சத்துக்களும் இழக்க நேரலாம்.


அடுத்ததாக வாழைப்பழங்கள் பழுக்க மிதமான வெப்பநிலை தேவை. இருப்பினும், அவற்றை காயாகவே வைத்திருக்க விரும்பினால் அவற்றை பிரிட்ஜில் வைக்கலாம். ஆனால் பழுத்த பிறகு குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது. தர்பூசணியை ஃப்ரெஷாக சாப்பிட வேண்டும். அதை வெட்டி உங்கள் குளிர்சாதன பெட்டியில் மிக நீண்ட நேரம் வைத்தால் அதன் ஆக்ஸிஜனேற்ற பண்புகளை இழக்கும்.

Similar News