வெற்றிகரமாக முடித்தது விண்வெளி பயணம்: புளு ஆரிஜின் நிறுவனத்தின் சாதனை!

Update: 2021-07-21 12:45 GMT

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் தன்னுடைய வாழ்வில் நான் என்னவாகப் போகிறோம் என்று ஒரு ஆசை இருக்கும் இருக்கத்தான் செய்யும். அதற்காக அவர் பல வருடங்களாக காத்திருக்க நேரிடலாம். அந்த வகையில் தற்போது அமேசான் நிறுவனத்தின் முன்னாள் CEO அதிகாரியான ஜெஃப் பெசோஸ் அவர்களுக்கும் தான் விண்ணில் பயணம் செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாம். அந்த ஆசை தற்போது முழுமையாக நிறைவேறி இருக்கிறது என்று சொல்லலாம். இது இந்த ஆசையை அடைவதற்காக இவர் பல்வேறு முயற்சிகளை ஆரம்ப காலத்திலிருந்து செய்திருக்கிறார்.


குறிப்பாக இதற்காக ஒரு நிறுவனத்தையும் இவர் உருவாக்கி இருக்கிறார். அந்த நிறுவனத்தின் பெயர் தான் புளு ஆரிஜின். எனவே இந்த நிறுவனத்தின் முழு முயற்சியும் விண்ணில் மனிதன் பயணம் செய்வது எப்படி? மற்றும் விண்ணிலிருந்து திரும்ப பூமிக்கு வருவது எப்படி? என்பது குறித்த ஆய்வுகள் மேற்கொள்வது தானாம். இறுதியில் இந்த நிறுவனத்தின் முயற்சிகள் சில ஆண்டுகளுக்குப்பின் கைகூடி வந்தன. அந்த வகையில் தற்போது ஜெஃப் பெசோஸ் வெற்றிகரமாக விண்வெளிப் பயணத்தை நிறைவு செய்தார்.


நிலவில் மனிதன் சென்று வந்ததன் 52வது ஆண்டை கொண்டாடும் விதமாக நேற்றைய தினத்தில் மனிதர்கள் விண்ணுக்கு சென்று வரும் திட்டத்தை புளு ஆரிஜின் நிறுவனம் திட்டமிட்டிருந்தது. அதன்படி, அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து நேற்று மாலை நியூ ஷெப்பர்ட் என்னும் ராக்கெட் மூலம் விண்வெளிப் பயணம் தொடங்கியது.

இதில் அமேசான் முன்னாள் CEO ஜெஃப் பெசோஸ் மற்றும் அவரது சகோதரர் மார்க்பெசோஸ் மற்றும் 82 வயது மூதாட்டி என 4 பேர் விண்வெளிக்கு வெற்றிகரமாக சென்று விட்டு திரும்பினர். சுமார் 3.50 லட்சம் அடி உயரம் வரையிலான இவர்களின் பயணம் சுமார் 11 நிமிடங்கள் வரை நீடித்தது. விண்ணில் இருந்து பாராஷுட் மூலமாக நால்வரும் பூமிக்கு திரும்பினர். 

Similar News