"சிலை வழிபாடு கிறிஸ்துவ மத நம்பிக்கைக்கு எதிரானது ஆகையால் துர்க்கா பூஜைக்கு அனுமதிக்க முடியாது" - பப்புவா நியூ கினியா நாட்டின் போலீஸ் கமிஷனர் சர்ச்சை கருத்து !

Update: 2021-10-01 09:43 GMT

"சிலைவழிபாடு கிறிஸ்தவ மத நம்பிக்கைக்கு எதிரானது ஆகும். ஆகையால் நவராத்திரி வழிபாடு நடத்த  இந்துக்களை அனுமதிக்க முடியாது " என்று பாபுவா நீயு கினியா  நாட்டின்  போலீஸ் கமிஷனர் டேவிட் மண்ணிங் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் கமிஷ்னராகவும் கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாட்டாளராகவும்  பதவிவகிப்பவர்  டேவிட் மண்ணிங்.நவராத்திரி பண்டிகைகளுக்கு இந்துக்கள் வழிபட அனுமதி அளிக்காதது அத்தீவின் உள்ள இந்துக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

புஸ்பென்டு மைட்டி என்பவர் போர்ட் மோர்ஸ்பை துர்கா பூஜை கமிட்டி தலைவராவார்.  அவர் தீவில் துர்க்கா பூஜை வழிபாட்டுக்கு அனுமதி அளிக்க கோரிக்கை ஒன்றை  தீவின் போலீஸ் கமிஷனர் டேவிட் மண்ணிங்குக்கு அனுப்பினார் .

அந்த கடிதத்திற்கு மன்னிங் பதிலளித்துள்ளார் : உங்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படுகிறது. ஆனால் சிலைவழிபாடு என்பது கிறிஸ்தவ மத நம்பிக்கைக்கு எதிரானது ஆகும். ஆகையால் நவராத்திரி வழிபாட்டிற்கு அனுமதிக்க முடியாது " என்று  பதில் கூறியுள்ளார்.





இந்தக் கடிதம் வெளிவந்தபின் பெரும் சர்ச்சையை அந்த தீவில் கிளப்பியது.

பின்பு மண்ணிங் ஒரு மன்னிப்பு கடிதத்தை வெளியிட்டார் அந்த கடிதத்தில் " பெரும் தவறு ஒன்று நடந்து விட்டது. இந்த துரதிருஷ்டமான சம்பவத்திற்கு என்னை மன்னித்து விடுங்கள் இக்கடிதத்தில் உள்ள கருத்து என்னுடையது அல்ல " என்றும் மழுப்பினார்.

மேலும் அவர் இந்த நவராத்திரி பண்டிகையை நடத்துவதற்கான ஆய்வுக் கூறுகளை ஆராய உள்ளதாகவும் கூறியுள்ளார்.  

Hindu Post

Similar News