நாளை டிசம்பர் மாதத்திற்கான சர்வதரிசன டோக்கன்கள், திருமலா இணையத்தில் வெளியீடு !

Update: 2021-11-26 09:15 GMT

திருப்பதி சர்வ தரிசனத்திற்கான இணைய வழி நுழைவு பதிவு நாளை திருமலா-திருப்பதி இணையத்தில் வெளியிடப்படுகிறது.


திருப்பதி ஏழுமலையானை இலவச தரிசனத்தில் சென்று வழிபடும் பக்தர்களுக்கு தரிசன அனுமதி அட்டை நேரில் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, ஆன்லைன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அடுத்த மாதத்துக்கான (டிசம்பர்) இலவச தரிசன அனுமதி அட்டை நாளை (சனிக்கிழமை) காலை 9 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. பக்தர்கள் திருமலையில் தங்குவதற்கான அறைகள் டிசம்பர் மாதத்துக்கான ஒதுக்கீடு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியளவில் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

கொரோனோ பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் தரிசனம் இணைய வழி முன்பதிவில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது. மேலும் இரு தடுப்பூசியும் முழுமையாக செலுத்தியவர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.


Source - maalai malar

Similar News