கோவிலில் மீண்டும் கொள்ளை முயற்சி - தொடரும் சம்பவங்கள்! தீர்வுதான் என்ன?

Update: 2021-12-21 03:00 GMT

நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே கோவில் உண்டியலை உடைத்த மர்ம நபர்கள் அதிலிருந்த பணம் நகைகளை கொள்ளையடிக்க முயற்சி செய்தபோது ஊர் மக்கள் அவர்களை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே இலுப்புலியில் கோவில் உண்டியலை உடைத்து இரண்டு வாலிபர்கள் அதிலிருந்த நகைகளை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். 

கோவிலில் அதிகாலை 4 மணி அளவில் உண்டியலை உடைக்கும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் கோவிலுக்கு சென்று பார்த்தபோது அங்கு கோவில் உண்டியலை உடைத்துக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ஊர் மக்கள் வருவதை கண்ட இரண்டு கொள்ளையர்களும் அங்கிருந்து தப்பித்து ஓட முயற்சி செய்தபோது மக்கள் அவர்களை மடக்கி பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையின் போது அவர்கள் இருவரும் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த கொத்தனார் வேலை செய்து வரும் மணிகண்டன் மற்றும் கார்த்திக்‌ என்பது தெரிந்தது. அவர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து கோவில் உண்டியலில் இருந்து திருடப்பட்ட ஆயிரம் ரூபாயை மீட்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.

இதேபோல் அரியலுார் அருகே மருதுார் தெற்குப்பட்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில்கோவில் உண்டியலை உடைத்த மர்ம நபர்கள் கோவில் உண்டியலில் இருந்த பணம் நகைகளைத் திருடி சென்றுள்ளனர். கோவில் பூசாரி அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கோவிலில் பணம் நகைகளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். கோவிலில் பணம் நகைகள் கொள்ளை போவதையும் சிலைகளையும் பாதுகாப்பதற்காக அனைத்து கோவில்களிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source : Dinamalar

Dinamalar

Tags:    

Similar News