"சர்ச் கட்டி கொடுத்தால் அனைத்து ஓட்டுகளும் உங்களுக்கே" - முதல்வர் முன்பு கிறிஸ்தவ மத போதகர் பேச்சு!

Update: 2021-12-22 00:30 GMT

தமிழ்நாட்டில் கிறிஸ்தவ தேவாலயங்கள் கட்ட உதவி செய்தால் பெந்தகோஸ்தே உறுப்பினர்களின் அனைத்து வாக்குகளும் திமுகவிற்கு அளிக்கப்படும் என்று கிறிஸ்துமஸ் விழாவில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முன்பு மத போதகர் ஒருவர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்துக்கள் பண்டிகையின் போது ஒரு மதச்சார்பற்ற அரசின் முதல்வராக இந்துக்களுக்கு வாழ்த்து கூட கூறாத முதலமைச்சர் முக.ஸ்டாலின் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் என்ற அமைப்பு ஏற்பாடு செய்த கிறிஸ்துமஸ் விழாவில் பங்கு கொண்டு சிறப்பித்துள்ளார். திமுக வெற்றி பெற்றதற்கு சிறுபான்மையினரான கிறிஸ்தவர்கள் தான் காரணம் என்று பல்வேறு மேடைகளில் கிறிஸ்தவ மத போதகர்கள் தெரிவித்து வரும் நிலையில் இதே போன்று மேலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

கிறிஸ்துமஸ் விழாவிற்கு தலைமை தாங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மத போதகர் ஒருவர் கிறிஸ்தவ தேவாலயங்கள் கட்டுவதற்கு தமிழக அரசு மேலும் அனுமதி அளித்தால் பெந்தகோஸ்தே உறுப்பினர்களின் 60 லட்சம் வாக்குகளும் திமுகவிற்கு தான் செலுத்தப்படும் என்று பேசியுள்ளார்.

இந்த விழாவில் பேசிய அந்த மத போதகர் கிறிஸ்தவ மத வரலாற்றை நினைவு கூர்ந்து பேசினார்.

அப்போது கோரேஸ் ராஜா என்பவர் கிறிஸ்தவர்களுக்காக பல்வேறு தேவாலயம் கட்டியதாகவும் அதேபோல் தமிழகத்தில் கட்ட முடியாமல் இருக்கும் தேவாலயங்களை கட்டி முடிப்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உதவி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். பெந்தகோஸ்தே பிரிவில் 50,000 திருச்சபைகள் இருப்பதாகவும் அவற்றில் 60 லட்சம் பேர் உறுப்பினர்கள் இருப்பதாகவும் முதல்வர் ஸ்டாலின் சர்ச் கட்ட அனுமதி தரும் பட்சத்தில் அவர்கள் வரக்கூடிய ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல்களில் திமுகவிற்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி மேம்படுத்தப்பட்ட காசி விஸ்வநாதர் கோவிலை திறந்து வைத்து வழிபாடு செய்ததை மதச்சார்பற்ற நாட்டின் பிரதமர் எவ்வாறு சமய சடங்குகளை செய்யலாம் என்று விமர்சித்தவர்கள் இப்போது என்ன சொல்லப் போகிறார்கள் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பாத்துக் கொண்டுள்ளனர்.

Source :

Tags:    

Similar News