உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை மீட்டு வர இந்திய வெளியுறவு அமைச்சகம் எடுக்கும் அதிரடி நடவடிக்கை!

Update: 2022-02-24 09:27 GMT

ரஷ்யா உக்ரைனுக்கு இடையே போர் நிலவுவதால், உலக முழுவதும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.


ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே பல நாட்களாக பதற்றமான சூழ்நிலை உருவாகி இருந்த நிலையில், இன்று போர் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதனால் ரஷ்யப் படையினர் உக்ரைனில் ஊடுருவி தாக்குதல்களை தொடங்கியுள்ளனர்.


உக்ரைன் நாட்டு மக்கள், ரஷ்ய தாக்குதலுக்கு அஞ்சி ரயில் நிலையங்களில் தஞ்சமடைந்து வருகின்றனர்.


ரஷ்ய தாக்குதலுக்கு பதிலடியாக உக்கிரனும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ரஷ்ய நாட்டின் 5 போர் விமானங்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் உக்ரைனால் சுட்டு வீழ்த்தப்பட்டது. 


இப்படி  உச்சகட்ட பதட்ட  சூழ்நிலை நிலவும் உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்டு வருவது குறித்து, இந்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில் டெல்லியில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறை முழுவீச்சில் இயங்கி வருகிறது.




Similar News