"மோடி பேசினால் போர் நிறுத்தம் பற்றி புடின் யோசிக்கவாவது செய்வார்" - உக்ரைன் தூதர் உருக்கம்!

Update: 2022-02-24 12:48 GMT

ரஷ்யா உக்ரைனுக்கு இடையே போர் நிலவுவதால், உலக முழுவதும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.


ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே பல நாட்களாக பதற்றமான சூழ்நிலை உருவாகி இருந்த நிலையில், இன்று போர் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதனால் ரஷ்யப் படையினர் உக்ரைனில் ஊடுருவி தாக்குதல்களை தொடங்கியுள்ளனர்.


உக்ரைன் நாட்டு மக்கள், ரஷ்ய தாக்குதலுக்கு அஞ்சி ரயில் நிலையங்களில் தஞ்சமடைந்து வருகின்றனர்.


உக்ரைன் நாட்டு மக்கள் மட்டுமல்லாமல், உலகமே 'இந்தப் போரால் மூன்றாம் உலகப்போர் ஏற்படுமோ?' என்று  பயத்தில் நடுங்கி வருகிறது.


இந்நிலையில் 'இப்போரை நிறுத்திட இந்திய பிரதமர் மோடி ரஷ்ய அதிபரை சமாதனம் செய்ய வேண்டும்' என்று இந்தியாவுக்கான உக்ரைன்  தூதர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இதுகுறித்து   இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் கூறியுள்ளதாவது:  உலகத் தலைவர்களின் பேச்சை புடின் கேட்பார் என்று தெரியாது. ஆனால், இந்திய பிரதமர்  மோடி  பேசினால் அதனைப் பற்றி புடின் யோசிக்கவாவது செய்வார். அதனால் இந்தியாவின் ஆதரவு எங்களுக்கு வேண்டும்.


என்று உக்ரைன் தூதர் மோடியிடம்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Similar News