'ஆயுதமேந்த பாதுகாப்பு படைக்கு வாருங்கள்' - பொதுமக்களை போருக்கு அழைக்கும் உக்ரைன்

Update: 2022-02-24 13:30 GMT

'ஆயுதம் ஏந்த தயாராக இருப்பவர்கள் பிராந்திய பாதுகாப்பு படைகளில் சேரலாம்' என உக்ரைன் பாதுகாப்பு மந்திரி பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.


உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்ய படைகளுக்கு விளாதிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார், இதன்படி ரஷ்யப் படைகள் உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ஏவுகணை மழை பொழிந்து வருகின்றன. உக்ரேனின் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றும் முனைப்பில் ரஷ்யா தீவிரம் காட்டி வருகிறது.


இந்நிலையில் பாதுகாப்பு படையில் சேர்வதற்கு அந்நாட்டு மக்களுக்கு உக்ரைன் பாதுகாப்பு மந்திரி ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் அறிவிப்பை விடுத்துள்ளார். அதன்படி ஆயுதமேந்த தயாராக இருப்பவர்கள் பிராந்திய பாதுகாப்பு பணியில் சேரலாம் என அவர் அறிவித்துள்ளார், உக்ரைன் மீது ரஷ்ய படைகள் முழு அளவிலான போரை துவக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரஷ்யப் படைகளின் எண்ணிக்கை உக்ரைன் படைகளை விட இரண்டு மடங்கு அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Source - Daily thanthi

Similar News