ஓ.டி.டி தளங்களுக்கு கடிவாளம் - உத்தரவு விரைவில்

Update: 2022-03-21 13:00 GMT

ஓ.டி.டி தளங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.


தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக தற்போது உலகம் முழுவதும் ஒ.டி.டி சேவை பிரபலமாகி வருகிறது, இந்தியாவில் மட்டும் 40 முதல் 50 ஓ.டி.டி தளங்கள் வரை இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஓ.டி.டி தளங்களுக்கென எந்த ஒரு கட்டுப்பாடுகளுமின்றி தன்னிச்சையாக செயல்பட்டு வருகின்றனர் ஓ.டி.டி தளங்கள். இதனைக் கட்டுக்குள் கொண்டு வந்து பார்வையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இருக்கும் வண்ணம் மத்திய அரசு பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகளை செய்து வந்தது.


இந்நிலையில் புதிய விதிமுறைகள் விரைவில் அமலுக்கு வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வயதின் அடிப்படையில் ஐந்து வகைகளாக ஓ.டி.டி வீடியோக்கள் பிரிக்கப்பட்டுள்ளன அவைகள் அனைவரும் பார்க்கும் வகையில் உள்ள வீடியோக்களுக்கு 'U' சான்றிதழும், 7 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பார்க்கக்கூடிய வீடியோக்களுக்கு U/A 7+ சான்றிதழ், 13 வயதுக்குள் உள்ளவர்கள் பார்க்கக்கூடிய வீடியோக்களுக்கு U/A 13+ சான்றிதழ்களும், 16 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பார்க்கக்கடிய வீடியோக்களுக்கு U/A 16+ சான்றிதழ், மற்றும் வயது வந்தவர்கள் பார்க்கக்கூடிய வீடியோக்களுக்கு A சான்றிதழ் வழங்கப்பட உள்ளன என கூறப்பட்டுள்ளது.


இதுவரை எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் இருந்த ஓ.டி.டி தளங்கள் இனி மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் உட்பட்டு படங்களை ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


Source - Maalai malar

Similar News