ராகுல் யாத்திரையில் பங்கேற்றவர்களுக்கு வெள்ளி நாணயம், இனிப்புகள் - யாத்திரையில் ஆள் இல்லாத காரணத்தினால் இந்த ஏற்பாடா?

பாத யாத்திரையில் தன்னுடன் பங்கேற்றோருக்கு வெள்ளி நாணயம் இனிப்புகள் ஆகியவற்றை ராகுல் காந்தி வழங்கியுள்ளார்.

Update: 2022-10-26 09:15 GMT

காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து இந்திய ஒற்றுமை பயணம் என்ற பாதயாத்திரையைத் தொடங்கினார். கேரளா கர்நாடகா வழியாக தெலுங்கானாவை அடைந்தார். தீபாவளிக்காக மூன்று நாட்கள் விடுமுறை அளித்துவிட்டு அவர் டெல்லி திரும்பினார் .


இந்த நிலையில் பாதையாத்திரை முழுவதும் தன்னுடன் பங்கேற்றவர்கள், தங்குமிடங்களில் பணியாற்றியவர்கள், வாகன டிரைவர்கள் ஆகியோருக்கு ராகுல் காந்தி ஒரு கடிதம் எழுதி உள்ளார். தனது தீபாவளி பரிசாக வெள்ளி நாணயம்,இனிப்புகள் ஆகியவற்றை அனுப்பி வைத்துள்ளார். கடிதத்தில் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது, இந்திய ஒற்றுமை பயணத்தில் நாம் கைகோர்த்து செயல்பட்டுள்ளோம் .உங்கள் மீதான உங்களது நம்பிக்கை, இந்தியாவின் உண்மையான பாரம்பரியத்தில் கொண்டுள்ள நம்பிக்கை ஆகியவை வெறுப்புணர்வை தோற்கடித்து நாம் செல்லும் பாதைக்கு ஒளியூட்டும். பேச வேண்டாம், செயல்படுங்கள். வாக்குறுதி அளிக்க வேண்டாம், நிரூபித்து காட்டுங்கள். தங்களுக்கும் ,தங்கள் குடும்பத்துக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் இவ்வாறு அவர் கூறினார்.





 


Similar News