கொரோனா இறப்பை அமுக்கிய சீனா - தகவல்களை மூடி மறைத்து மீண்டும் நடக்கும் மாபெரும் சதி!

Update: 2022-12-20 08:14 GMT

சீனாவில் மக்கள் போராட்டம் காரணமாக கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகள் தளர்த்தப்பட்டது. இதனால் சீனாவில் கரோனா பரவல் அதிகரித்துள்ளது. உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன.

ஒரே நாளில் உயிரிழந்த 30 பேரின் சடலங்கள் வந்ததாக பெய்ஜிங் மயான ஊழியர் ஒருவர்கூறியுள்ளார். இதேபோல் பெய்ஜிங் நகரில் உள்ள மற்ற மயானங்களிலும் இறந்தவர்களின் உடல்கள் அதிகளவில் வருவதாக அங்குள்ள ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

டோங்ஜியோ என்ற இடத்தில் 150 உடல்கள் வந்துள்ளன. இவற்றில் 40 கரோனா பாதிப்பு உடல்கள் என அங்குள்ளஊழியர் ஒருவர் தெரிவித்தார். ஆனால் கடந்த டிசம்பர் 4முதல் சீனாவில் கொரோனா உயிரிழப்புகளைபதிவு செய்யவில்லை.

பெய்ஜிங் நகரில் ஒரே நாளில் ஆயித்துக்கும் மேற்பட்ட கரோனா பாதிப்புகள் ஏற்பட்ட போதிலும், கரோனா உயிரிழப்பு ஒன்றுமில்லை என சீன அரசு கடந்த தெரிவித்தது.

Input From: Hindu

Similar News