சைனா நாடு எல்லையில் இந்தியாவை பார்த்து அதிரும் வகையில் இந்திய பாதுகாப்புத் துறைக்கு அதிநவீன பிரிடேட்டர் டிரோன்களை அமெரிக்காவிடம் இருந்து இந்தியா வாங்கும் ஒப்பந்தம் மிக விரைவில் போடப்படுகிறது.
இந்தியாவிற்கும் அண்டை நாடான சீனாவிற்கும் பல ஆண்டு கால உரசல் இருந்துகொண்டே வருகிறது, இந்தியாவின் வளர்ச்சி, பிரதமர் மோடிக்கு உலக நாடுகள் அளித்து வரும் மரியாதை, கொரோனோ காலத்தில் மற்ற உலகநாடுகள் பொருளாதார ரீதியாக இன்னமும் சரியாகாத நிலையில் இந்தியா வீறு கொண்டு எழுந்து வருவது சீனாவிற்கு அச்சுறுத்தலை எழுப்பி வருகிறது.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சுமுகமான உறவே கடந்த பல ஆண்டுகளாக நிலவி வருகிறது. இந்திய ராணுவத்திற்குத் தேவையான ஆயுதங்களை அமெரிக்காவிடம் இருந்தும் இந்தியா அதிகம் கொள்முதல் செய்து வருகிறது.
இதனிடையே இந்தியச் சீன எல்லைப் பகுதிகளைக் கண்காணிக்க ஏதுவாக அமெரிக்காவிடம் இருந்து அதிநவீன டிரோன்களை வாங்கவுள்ளது. இது இந்திய பாதுகாப்புப் படைக்கு மிகப் பெரிய பூஸ்டாக இருக்கும். எல்லையில் இந்தியாவின் கை ஓங்கும்.
3 பில்லியன் டாலர் மதிப்பிலான 30 MQ-9B பிரிடேட்டர் ஆயுதமேந்திய ட்ரோன்கள் அமெரிக்காவிடம் இருந்து இந்தியா வாங்க ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கான ஒப்பந்தத்தை முன்கூட்டியே முடிப்பதற்கு இந்தியாவும் அமெரிக்காவும் ஆர்வமாக உள்ளன. இது நிறைவேறும் நிலையில் இது இந்தியச் சீன எல்லைப் பகுதிகள் மட்டுமின்றி, இந்தியப் பெருங்கடல் பகுதி தொடங்கிப் பல பகுதிகளில் இந்தியாவின் கண்காணிப்பை வலுப்படுத்த உதவும். கடந்த 5 ஆண்டுகளாகவே இது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், தற்போது இந்தியாவே இதில் இறுதி முடிவெடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.