படிக்கும் மாணவர்கள் மத்தியில் கஞ்சா, வெடி புழக்கம்...! அண்ணாமலை எழுப்பும் சந்தேகம்...!
கல்லூரி மாணவர்கள் கையில் வெடிகுண்டா...! அதிரவைக்கும் சென்னை சம்பவத்தின் பின்னணி என்ன...?
சென்னையில் இருக்கும் மிகவும் பிரபலமான கல்லூரிகளில் ஒன்றாக குருநானக்கல்லூரி கருதப்படுகிறது. இது சென்னை கிண்டி வேளச்சேரியில் அமைந்துள்ளது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வரும் இந்த கல்லூரியில் இரு பிரிவை சேர்ந்த மூன்றாம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவர்கள் இடையே யார் பெரியவன் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
இந்த சர்ச்சையால் அடிக்கடி இரு பிரிவு மாணவர்களிடையே வாக்குவாதமும் சண்டையும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி எழுந்த சர்ச்சை பூதாகரமாக வெடித்து கல்லூரியில் இரண்டு பிரிவு தரப்பினர்களும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்த தகராறின் பொழுது ஒரு தரப்பு பிரிவை சேர்ந்த மாணவர்கள் பட்டாசு வெடியை வெடித்ததாக கூறப்படுகிறது. இந்த பட்டாசு வெடியால் கல்லூரி வளாகம் முழுவதும் பெரும் பதட்ட நிலை ஏற்பட்டதோடு கல்லூரி மாணவர்களிடையே சண்டை முற்றியது இதனால் கல்லூரி நிர்வாகம் உடனடியாக கிண்டி போலீசாரை அணுகி புகார் அளித்துள்ளது.
போலீசார் நேரில் வந்து வெடித்தது தீபாவளி பட்டாசா அல்லது நாட்டு வெடிகுண்டா என்பதை ஆராய்ந்ததாகவும் கூறப்படுகிறது இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்து கண்டனங்களை முன்வைத்து வரும் சில அரசியல் தலைவர்கள் கல்லூரியில் வெடித்தது நாட்டு வெடிகுண்டு என்று தெரிவிக்கின்றனர் இறுதியாக இந்த தகராறில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரையும் கல்லூரி நிர்வாகம் கல்லூரியில் இருந்து நீக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த சம்பவம் தமிழக முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது ஏனென்றால் சில தினங்களுக்கு முன்பு தான் நாங்குநேரியில் பள்ளி மாணவர்கள் தீண்டாமையை கையில் எடுத்து ஆதிதிராவிட மாணவரை துன்புறுத்தியதோடு வெட்டுவதற்காக அரிவாளுடன் வீட்டுக்கு சென்று காயப்படுத்தினார்கள், இந்த சம்பவமே திமுகவிற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது ஏனென்றால் சட்ட ஒழுங்கு சீர் கேட்டு இருப்பதற்கு இதுவே சான்றாகும் என அரசியல் ரீதியிலான விமர்சனங்கள் எழுந்துள்ளன...