அற்புதமாக திட்டம்போட்டு போதை பொருள் கடத்திய மத போதகர் அற்புதராஜ்.... 'புஷ்பா' ஹீரோ போல் வாழ நினைத்து கடைசியில் நடந்ததுதான் மேட்டரே...!

Update: 2023-08-25 07:48 GMT

பகலில் பிரசங்கம் இரவில் கஞ்சா கடத்தல்.... போதை வியாபாரியாக மாறிய மத போதகர்...! தட்டி தூக்கிய காவல்துறை...!

கடந்த சில நாட்களாகவே போலீஸ் அதிகாரிகள் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், குற்றங்களை தடுக்கவும் இந்த சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் துறை கண்காணிப்பாளர்கள் வாகனத்தை சோதனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் அடிப்படையில் கயத்தாறு அருகே காவல்துறை தனிப்படை அமைத்து ஆய்வாளர்கள் ரவிக்குமார், ராஜ பிரபு, பிரடெரிக் ராஜன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பெரிய கண்டெய்னர் லாரி ஒன்று வந்ததை பார்த்து லாரியை திறந்து சோதனையில் முற்பட்டபோது அதன் மேல் ஒரு ரகசிய அறை இருப்பது காவல்துறைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது இதனை அடுத்து அந்த ரகசிய அறையில் என்ன இருக்கிறது என்று போலீசார் திறக்க முற்பட்ட போது தான் அதிர வைக்கும் தகவல்கள் வெளிவந்தன.

அந்த ரகசிய அறையில் கஞ்சா இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்..

மேலும் இந்த கஞ்சா கடத்தலின் பின்னணியை விசாரித்த போது தூத்துக்குடி மாவட்டத்தில் தருவைகுளம் எனப்படும் கடற்கரை பகுதி வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்திய தகவல் வெளிவந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது சினிமாவையே மிஞ்சும் அளவிற்கு கண்டெய்னர் லாரியில் ரகசிய அறை அமைத்து இந்த கடத்தல் நடைபெற்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளது தற்போது சில காலங்களாக போலீசாரின் சோதனை அதிக அளவில் இருப்பதால் அதிலிருந்து எப்படி தப்பிப்பது என்று பிளான் செய்து இந்த செட்டப் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன மேலும் அவர்கள் போட்ட பக்கா பிளான் எல்லாம் வீணாகும் அளவிற்கு போலீசாரிடம் வசமாக சிக்கியது குறிப்பிடத்தக்கது.

கண்டெய்னர் லாரியில் சிறிய அறை ஒன்றை அமைத்து அதில் கஞ்சா பொட்டலங்களை அடுக்கி வைத்தால் போலீசார் சோதனை செய்தாலும் கண்டுபிடிக்காத அளவுக்கு இந்த தனி அறை இருந்ததாக தெரிகிறது ஆனால் கண்டெய்னர் லாரியில் மேற்பகுதி சுற்றி வெள்ளை பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்ததால் அது போலீசாருக்கு சந்தேகத்தை கிளப்பிய நிலையில் மேற்பகுதியை தட்டி பார்த்தபோது கஞ்சா பொட்டலங்கள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

இதை அடுத்து இரண்டு கிலோ எடை கொண்ட 300 கஞ்சா பொட்டலங்களையும் கண்டெய்னர் லாரியையும் சேர்த்து போலீசார் கோவில்பட்டி மதுவிலக்கு பிரிவு போலீஸ் இடம் ஒப்படைத்தனர் மொத்தமாக இதன் மதிப்பு ஒரு கோடி என்று கூறப்படுகிறது

மேலும் இதில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் கண்டெய்னர் லாரி ஓட்டுநர் சக்தி பாபு பாண்டிச்சேரி பகுதியை சேர்ந்தவர் என்றும் இவருடன் சேர்த்து தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமார் மற்றும் தூத்துக்குடி ஆரோக்கிய புரத்தை சேர்ந்த மத போதகரான ஜான் அற்புதராஜா என மூன்று பேரையும் போலீஸ் கைது செய்தது மேலும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் கடத்தப்பட்ட கஞ்சா பொருட்களையும் கண்டெய்னர் லாரியையும் பார்வையிட்டு விசாரணை நடத்தினார் விசாரணை முடிவில் இந்த லாரி கண்டெய்னர் ஆந்திர மாநிலத்திலிருந்து கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது

இப்படி மத போதகராக இருந்து கொண்டு கஞ்சா கடத்தலில் ஈடுபட்டது குறித்து தூத்துக்குடி போலீசார் சிறப்பு விசாரணை நடத்தி வருகின்றனர். வெளியுலகத்திற்கு மத போதகர் ஆனால் பாதாள உலகத்தில் கஞ்சா வியாபாரியாக வாழ்ந்துவந்த அற்புதராஜாவை மக்கள் ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர்.

Similar News