உடான் திட்டத்தில் 120-க்கு மேல் புதிய விமான நிலையங்கள்: மத்திய அரசு அறிவிப்பு!

Update: 2025-03-20 06:26 GMT
உடான் திட்டத்தில் 120-க்கு மேல் புதிய விமான நிலையங்கள்: மத்திய அரசு அறிவிப்பு!

'உடான்' திட்டத் தின்கீழ் அடுத்த 10 ஆண்டுகளில் 120 புதிய விமான நிலை யங்களை சேர்த்து, 4 கோடி மக்களுக்கு விமானப் போக்கு வரத்து இணைப்பு கிடைக்க வழிவகை செய்யப் படும் என்று மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு மாநிலங்கள வையில் திங்கள்கிழமை தெரிவித்தார்.


மாநிலங்களவையில் திங்கள் கிழமை அமர்வில் கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில ளித்த அமைச்சர், பல உலக நாடு களின் பாராட்டுகளைப் பெற்ற உடான் திட்டம், நாட்டின் மிக வும் வெற்றிகரமான திட்டங்களில் ஒன்றாகும்.அனைத்து விமான நிலை யங்களையும் ஒன்றாக இணைப் பதே இந்தத் திட்டத்தின் நோக்க மாகும்.

நாடு முழுவதும் பல நகரங்களில் விமான நிலையங்கள் சுட்டப்பட்ட பிறகும், அந்த நகரங்களுக்கு இடையே விமான நிறுவனங்கள் சேவையைத் தொடங் குவதற்கு நம்பகத் தன்மை ஒரு பிரச்னை யாக இருப்பது கண்ட றியப்பட்டது. அந்தநே ரத்தில்தான், உடான் திட்டம் முன்மொழியப் பட்டது. இத்திட்டத்தால் இது வரை 1.5 கோடி மக்கள் பலன டைந்துள்ளனர்

Similar News